இவரு அக்கப்போர் தாங்கலையே... நடிகர் கருணாஸ் வாகனம் பறிமுதல்! தேர்தல் கூத்துகள்!

இவரு அக்கப்போர் தாங்கலையே... நடிகர் கருணாஸ் வாகனம் பறிமுதல்! தேர்தல் கூத்துகள்!

இவரு அக்கப்போர் தாங்கலையே... நடிகர் கருணாஸ் வாகனம் பறிமுதல்! தேர்தல் கூத்துகள்!
X

அனுமதியின்றி சுற்றுப்பயணம் மேற்கொண்ட முக்குலத்தோர் புலிகள் படைத் தலைவரும், நடிகருமான கருணாஸின் காரை போலீசார் பறிமுதல் செய்தனர்.

முக்குலத்தோர் புலிகள் படைத் தலைவர் கருணாஸ், தேசிய தெய்வீக யாத்திரை என்ற தலைப்பில் 6 நாட்கள் சுற்றுப்பயணத்தை அறிவித்துள்ளார். அதன்படி, சென்னையில் இருந்து நேற்று, தேசிய தெய்வீக யாத்திரை தொடங்கப்பட்டது. அப்போது, விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே வந்த அவரது காரை, போலீசார் மடக்கினர்.

அப்போது, நீங்கள் தேசிய தெய்வீக யாத்திரை என்ற தலைப்பில் 6 நாட்கள் சுற்றுப்பயணம் செய்வதாக தகவல் கிடைத்துள்ளது. அதற்கு காவல்துறையிடம் நீங்கள் முறையாக அனுமதி பெறவில்லை. எனவே, உங்கள் வாகனத்தை பறிமுதல் செய்கிறோம் என கருணாஸிடம் போலீசார் விளக்கம் கொடுத்தனர்.

இதனை ஏற்க மறுத்த கருணாஸ் போலீசாருடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். ஆனாலும், யாத்திரைக்காக பயன்படுத்தப்பட்ட வாகனத்தை போலீசார் கைப்பற்றி திண்டிவனம் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

இதனால், போலீசாரை கண்டித்து, அவரது ஆதரவாளர்கள் தேசிய நெடுஞ்சாலையில் திடீர் சாலைமறியல் போராட்த்தில் ஈடுபட்டனர். அவர்களிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி, கூட்டத்தை கலைத்தனர். இதனால், கருணாஸ் அங்கிருந்து வேறு ஒரு காரில் புறப்பட்டுச் சென்றார். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags:
Next Story
Share it