13 வயது சிறுவனை சுட்டுக் கொன்ற போலீசார்..!
13 வயது சிறுவனை சுட்டுக் கொன்ற போலீசார்..!

அமெரிக்காவின் சாண்டியாகோ மாகாணத்தின் வார்கொல்ட் பகுதியில் கார் ஒன்று திருட்டு போனதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து, அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த போலீசார் அங்கு வேகமாக வந்த காரை நிறுத்த முயன்றனர்.
ஆனால், அந்த கார் வேகமாகச் சென்று அங்கு நிறுத்தப்பட்டிருந்த போலீசாரின் ரோந்து வாகனத்தில் மோதியது.
இதையடுத்து, அந்த கார் மீது போலீசார் துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதில், காரை ஓட்டி வந்த 13 வயது சிறுவன் உயிரிழந்தான். அந்த காரில் இருந்த மேலும் 2 சிறுவர்கள் எந்த காயமும் இன்றி உயிர் தப்பினர்.
சிறுவன் ஓட்டி வந்த கார் வார்கொல்ட் பகுதியில் திருடப்பட்டது தான் என போலீசார் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story

