Theme Check

வேலை நேரத்தை போலீசார் தீர்மானிக்கக் கூடாது.. சென்னை ஐகோர்ட் அதிரடி தீர்ப்பு..!

வேலை நேரத்தை போலீசார் தீர்மானிக்கக் கூடாது.. சென்னை ஐகோர்ட் அதிரடி தீர்ப்பு..!

வேலை நேரத்தை போலீசார் தீர்மானிக்கக் கூடாது.. சென்னை ஐகோர்ட் அதிரடி தீர்ப்பு..!
X

கோவை மாவட்ட ஹோட்டல்கள் உரிமையாளர்கள் சங்கம் சார்பில் செய்தியாளர்கள் சந்திப்பு நடந்தது. இதில் பங்கேற்ற ஹோட்டல்கள் உரிமையாளர்கள் சங்க செயலாளர் சிவக்குமார் கூறியதாவது:

“கோவையில் ஹோட்டல்கள் மூடுவது குறித்த நேரக் கட்டுப்பாடு காரணமாக ஹோட்டல்கள் மற்றும் உணவகங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. ஊரடங்கு காலத்தில் கடந்த இரண்டு ஆண்டுகளாக ஹோட்டல்கள் சரிவர செயல்படவில்லை.

இதனால், உணவக உரிமையாளர்களுக்கு பெரிய அளவில் நஷ்டம் ஏற்பட்டது. இனி வரும் காலங்களில் இந்த நிலை தொடரக்கூடாது.

உணவகங்கள் மற்றும் ஹோட்டல்கள் மூடும் நேரத்தை உரிமையாளர்களே அவரவர் வசதிக்கேற்ப நிர்ணயம் செய்து கொள்ளலாம் என, சென்னை உயர்நீதிமன்றம் சமீபத்தில் தீர்ப்பளித்துள்ளது.

அத்துடன், சட்டம் - ஒழுங்கு பிரச்னை என்ற பெயரில் ஹோட்டல்கள் மற்றும் உணவகங்களின் வேலை நேரத்தை போலீசார் தீர்மானிக்கவோ, மூடச் சொல்லவோ கூடாது எனவும் தீர்ப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த தீர்ப்பை அமல்படுத்தினால், மாவட்டத்தில் உள்ள பல ஆயிரம் ஹோட்டல் உரிமையாளர்கள், ஊழியர்கள் பயனடைவார்கள். எனவே, கோவை மாநகர போலீசார் சென்னை உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பை நடைமுறைப்படுத்த வேண்டும்” என அவர் கூறினார்.

Next Story
Share it