Theme Check

செயின் பறித்த நபரின் கதையை கேட்டு கலங்கிய போலீஸ்!!

செயின் பறித்த நபரின் கதையை கேட்டு கலங்கிய போலீஸ்!!

செயின் பறித்த நபரின் கதையை கேட்டு கலங்கிய போலீஸ்!!
X

தாம்பரம் அருகே சிட்லபாக்கம் பகுதியில் ராதிகா என்ற மூதாட்டியின் வீட்டிற்குள் புகுந்த நபர் ஒருவர் 4 சவரன் நகையை பறித்துக் கொண்டு ஓட்டம் பிடித்தார். மூதாட்டி கூச்சலிட்டதால் அக்கம்பக்கத்தினர் அந்த நபரை விரட்டிப் பிடித்து போலீசில் ஒப்படைத்தனர்.

குற்றவாளியின் மெலிந்த உடல் மற்றும் பரிதாபமான தோற்றத்தைக் கண்டு இரக்கப்பட்ட போலீஸார் ஐந்து நாட்களாக சாப்பிடவில்லை என அவர் கூறியதும் கலங்கிப் போனார்கள். உடனே அந்த நபருக்கு சாப்பாடு வாங்கிக் கொடுத்தனர்.

சாப்பிட்ட பிறகு அவர் தனது பெயர் மோகனகுமார் என்றும், ஊர் வந்தவாசி என்றும் கூறினார். 2 ஆண்டுகளுக்கு முன் சென்னைக்கு வேலை தேடி வந்த மோகன குமாருக்கு கொரோனா காலம் என்பதால் வேலை கிடைக்கவில்லை.

unemployment

ஊருக்கும் செல்ல முடியாமல் சாலையோரம் தங்கிய அவருக்கு தொண்டு நிறுவனங்களும், சமூக ஆர்வலர்களும் உணவளிக்க, அதில் சுகம் கண்டு அப்படியே சாலையோரம் தங்கி விட்டார்.

கடந்த சில மாதங்களாக போதிய உணவு கிடைக்காமல் உடல் மெலியத் தொடங்கியது. சில நாட்களாக தொடர்ந்து சாப்பிடாத நிலையில், மூதாட்டியின் கழுத்தில் உள்ள நகையை பறித்தால் விற்று கிடைக்கும் பணத்தில் பல மாதங்கள் பசியாறலாம் என நினைத்துள்ளார்.

arrest

திட்டப்படி நகையை பறித்தாலும் பசியால் ஓட முடியாததால் சிக்கிக் கொண்டார். கதையை கேட்டு கலங்கிப் போன காவலர்கள், பசிக்காக திருடினாலும் குற்றம் குற்றமே என கூறி நீதிபதியிடம் ஆஜர்படுத்த, அவர் சிறையில் அடைக்க உத்தரவிட்டார்.

அப்போது, சிறையில் உணவு அளிப்பார்களா என ஆர்வமாக கேட்ட மோகன குமார், உணவு அளித்தால் எத்தனை நாள் வேண்டுமானாலும் சிறையில் இருப்பேன் என சந்தோஷமாக கூறியுள்ளார்.

newstm.in

Next Story
Share it