Theme Check

இந்த பாடல்களை வெளியிட்டால்.. கானா பாடகர்களுக்கு காவல்துறை எச்சரிக்கை..!

இந்த பாடல்களை வெளியிட்டால்.. கானா பாடகர்களுக்கு காவல்துறை எச்சரிக்கை..!

இந்த பாடல்களை வெளியிட்டால்.. கானா பாடகர்களுக்கு காவல்துறை எச்சரிக்கை..!
X

இளைஞர்கள் மத்தியில் குற்றச் செயல்களை தூண்டும் வகையில் கானா பாடல்களை உருவாக்கி வெளியிட்டால் குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

சமீபத்தில், ஆபாச பதிவுகளுடன் கானா பாடல் வெளியிட்டதாக சரவெடி சரண் என்பவரை காவல்துறையினர் கைது செய்து எச்சரித்து அனுப்பியிருந்தனர்.

இதனைத் தொடர்ந்து அவதூறு, ஆபாசம், போதை, குற்றச்செயல்களை தூண்டும் வகையில் சமூக வலைதளங்களில் இருந்த 100க்கும் அதிகமான கானா பாடல்களை சைபர் கிரைம் காவல் துறையினர் நீக்கியுள்ளனர்.

இந்நிலையில், மாதவரம் துணை ஆணையர் சுந்தரவதனம் கானா பாடகர்களை அழைத்து ஆலோசனை நடத்தினார். அப்போது, சர்ச்சையான கானா பாடல்களை நீக்குமாறும், மீண்டும் இது போன்று செயல்பட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் எச்சரித்தார்.
Next Story
Share it