Theme Check

காவலர் தற்கொலை விவகாரம்.. கந்துவட்டி அனிதா கைது !!

காவலர் தற்கொலை விவகாரம்.. கந்துவட்டி அனிதா கைது !!

காவலர் தற்கொலை விவகாரம்.. கந்துவட்டி அனிதா கைது !!
X

புவனகிரி அருகே கந்துவட்டி கொடுமையால் ஆயுதப்படை காவலர் தற்கொலை செய்த விவகாரத்தில் கந்துவட்டி அனிதாவை போலீசார் கைது செய்தனர்.

கடலூர் மாவட்டம் புவனகிரி பகுதியைச் சேர்ந்த செல்வகுமார்(27) ஆயுதப்படை காவலராக பணியாற்றி வந்தார். இந்த நிலையில், அவர் கடந்த 1ஆம் தேதி விஷம் அருந்தி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று காலை உயிரிழந்துள்ளார். இளம் காலவர் தற்கொலை விவகாரம் போலீசார் மற்றும் அவரது குடும்பத்தினர் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இதனிடையே, காவலர் செல்வகுமார் மரணம் தொடர்பாக கடலூர் புதுநகர் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

police

முதற்கட்ட விசாரணையில், கந்து வட்டி கொடுமையால் ஆயுதப்படை காவலர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. கந்துவட்டி கொடுமையினால் காவலரே தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அங்குள்ள காவலர்கள் மத்தியில் அச்சத்தையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

கந்துவட்டி கொடுமையால் ஆயுதப்படை காவலர் தற்கொலை செய்த விவகாரத்தில் கந்துவட்டி அனிதாவை போலீசார் கைது செய்தனர். காவலர் செல்வகுமாருக்கு ரூ.5 லட்சம் வழங்கிய நிலையில் ரூ.12 லட்சம் கேட்டு மிரட்டியதால் தற்கொலை செய்து கொண்டதாக புகார் எழுந்தது. இதனையடுத்து அனிதாவை கைது செய்து போலீசார் விசாரணை நடத்துகின்றனர்.

newstm.in

Next Story
Share it