Theme Check

கொரோனா உடையில் வந்து வாக்களித்த அரசியல் பிரபலம் !!

கொரோனா உடையில் வந்து வாக்களித்த அரசியல் பிரபலம் !!

கொரோனா உடையில் வந்து வாக்களித்த அரசியல் பிரபலம் !!
X

தமிழகத்தில் உள்ள 234 சட்டமன்ற தொகுதிகளுக்கு இன்று ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற்றது. இதற்கான வாக்குப்பதிவு காலை 7 மணிக்கு தொடங்கியது.இந்த சூழலில் கொரோனாவின் இரண்டாம் அலை பரவ தொடங்கிய உள்ள காரணத்தால் அனைவரும் முகக்கவசம் அணிந்து பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்று சுகாதாரத்துறை அறிவுறுத்தி இருந்தது.

இதனிடையே மாலை 6 மணிமுதல் கொரோனா நோயாளிகள் வாக்களிக்கலாம் என தேர்தல் ஆணையம் அறிவித்திருந்த நிலையில், கொரோனா பாதுகாப்பு உடை அணிந்துவந்து நாடளுமன்ற உறுப்பினரும் திமுக மகளிரணி தலைவருமான கனிமொழி வாக்களித்தார்.

முன்னதாக தமிழக சட்டமன்ற தேர்தலையொட்டி கடந்த சில வாரங்களாக தீவிர பரப்புரையில் ஈடுபட்ட கனிமொழிக்கு கடந்த 3-ம் தேதி கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. அதைத் தொடர்ந்து சென்னை நுங்கம்பாக்கத்திலுள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகிறார்.கொரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் நிலையிலும், ஆம்புலன்ஸ் மூலம் வந்து சென்னை மயிலாப்பூர் வாக்குச்சாவடியில் கனிமொழி, தனது வாக்கை பதிவுசெய்து ஜனநாயகக் கடமையை நிறைவேற்றினார்.

Tags:
Next Story
Share it