Theme Check

ஆர்வமாக வந்து வாக்களித்த அரசியல் தலைவர்கள்.. யார், யார் எங்கு தெரியுமா..?

ஆர்வமாக வந்து வாக்களித்த அரசியல் தலைவர்கள்.. யார், யார் எங்கு தெரியுமா..?

ஆர்வமாக வந்து வாக்களித்த அரசியல் தலைவர்கள்.. யார், யார் எங்கு தெரியுமா..?
X

தமிழகம் முழுவதும் இன்று காலை முதல் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்கான ஓட்டுப்பதிவு விறுவிறுப்பாக நடந்து வருகிறது. அரசியல் கட்சி பிரமுகர்கள் ஆர்வமாக ஓட்டளித்து வருகின்றனர்.

தெலுங்கானா ஆளுநரும், புதுச்சேரி துணைநிலை ஆளுநருமான தமிழிசை சௌந்தரராஜன், சென்னை விருகம்பாக்கத்தில் உள்ள காவேரி உயர்நிலைப் பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடிக்கு காலை 7 மணிக்கே முதல் ஆளாக கணவருடன் வந்து வாக்களித்தார்.
Image
சென்னை தேனாம்பேட்டை எஸ்.ஐ.இ.டி கல்லூரி வளாகத்தில் உள்ள ஓட்டுச்சாவடிக்கு தனது மனைவி துர்காவுடன் வந்த தமிழக முதல்வர் ஸ்டாலின், சில நிமிடங்கள் வாக்காளர்களுடன் வரிசையில் நின்று தனது ஓட்டை பதிவு செய்தார்.
latest tamil news
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் ரொட்டிக்காரர் தெருவில் உள்ள தாகூர் பள்ளி வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள ஓட்டுச்சாவடியில் பா.ம.க., நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தனது மனைவி மற்றும் குடும்பத்தினருடன் வந்து ஓட்டு போட்டார்.

திருச்சி மாநகராட்சி 58-வது வார்டுக்குட்பட்ட கிராப்பட்டி சிறுமலர் மேல்நிலைப்பள்ளி வாக்குச் சாவடியில் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி இன்று காலை தனது தாயார் மாலதி, சித்தப்பா அன்பில் பெரியசாமி ஆகியோருடன் வாக்களித்தார்.

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் சென்னை ஆலப்பாக்கத்தில் உள்ள வேளாங்கண்ணி பள்ளி வாக்குச்சாவடியில் தனது வாக்கை பதிவு செய்தார்.

கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டினம் பேரூராட்சிக்குட்பட்ட 10-வது வார்டில் அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமி தனது குடும்பத்தினருடன் நீண்ட வரிசையில் காத்திருந்து வாக்குப்பதிவு செய்தார்.

சென்னை ஆழ்வார்பேட்டை 2-வது சாலையில் மக்கள் நீதி மய்யம் அலுவலகம் உள்ள நிலையில், அதே சாலையில் உள்ள உயர்நிலைப் பள்ளியில் அமைக்கப்பட்டிருந்த வாக்குச் சாவடியில் நடிகரும், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன் வாக்களித்தார்.

Next Story
Share it