Theme Check

அரசியல் பரபரப்பு.. முதல்வரின் உறவினர் வீடுகளில் ரெய்டு..!

அரசியல் பரபரப்பு.. முதல்வரின் உறவினர் வீடுகளில் ரெய்டு..!

அரசியல் பரபரப்பு.. முதல்வரின் உறவினர் வீடுகளில் ரெய்டு..!
X

பஞ்சாப் மாநிலத்தில் உள்ள 117 தொகுதிகளுக்கான சட்டமன்ற பொதுத்தேர்தல் வரும் பிப்ரவரி மாதம் 20-ம் தேதி நடைபெற உள்ளது. இதற்காக, ஆளும் காங்கிரஸ், பாஜக, ஆம் ஆத்மி கட்சிகளிடையே கடும் போட்டி நிலவுகிறது.

இந்நிலையில், பஞ்சாப் முதல்வர் சரண்ஜித் சன்னியின் நெருங்கிய உறவினரான பூபிந்தர் சிங் ஹனி உள்ளிட்டோரின் வீடு மற்றும் அலுவலகங்கள் என 10 இடங்களில் அமலாக்கத் துறையினர் சோதனை நடத்தினர்.
Charanjit Singh Channi to be first Dalit Chief Minister of Punjab
சட்டவிரோதமாக மணல் அள்ளியது, குவாரிகள் நடத்துவது தொடர்பாக முதல்வரின் வீடுகளில் சோதனை நடைபெறுவதாக கூறப்படுகிறது. சட்டசபை தேர்தல் நெருங்கி வரும் சூழலில் இந்த சோதனை நிகழ்வுகள் அரசியல் அரங்கில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Next Story
Share it