Theme Check

அரசியல் பரபரப்பு.. ரஜினிகாந்த் - சசிகலா திடீர் சந்திப்பு..!

அரசியல் பரபரப்பு.. ரஜினிகாந்த் - சசிகலா திடீர் சந்திப்பு..!

அரசியல் பரபரப்பு.. ரஜினிகாந்த் - சசிகலா திடீர் சந்திப்பு..!
X

சென்னை போயஸ் கார்டன் இல்லத்தில் நடிகர் ரஜினிகாந்தை வி.கே. சசிகலா சந்தித்துப் பேசினார். பரபரப்பான அரசியல் சூழலில் இந்த சந்திப்பு மிகுந்த முக்கியத்துவம் பெற்றுள்ளது.

அதிமுக உட்கட்சி தேர்தல் தொடர்பாக சில நாட்களுக்கு முன்பு பரபரப்பான அறிக்கை வெளியிட்ட சசிகலா, இன்று (7ம் தேதி) யாரும் எதிர்பாராத வகையில் ரஜினிகாந்த் இல்லம் சென்று அவரை சந்தித்துப் பேசியுள்ளார்.

சமீபத்தில் உடல் நலம் பாதிக்கப்பட்டு குணமடைந்த ரஜினிகாந்தை நேரில் சந்தித்து நலம் விசாரித்ததாக சசிகலா அறிக்கை வெளியிட்டுள்ளார். அத்துடன், தாதா சாகேப் பால்கே விருது பெற்றதற்கு வாழ்த்து கூறியுள்ளார்.

எது எப்படியோ, பரபரப்பான இன்றைய அரசியல் சூழலில், ரஜினிகாந்த் - சசிகலா திடீர் சந்திப்பு மிகுந்த முக்கியத்துவம் பெற்றுள்ளது.

Next Story
Share it