Theme Check

பொங்கல் விழா கபடி போட்டி - 6 பேருக்கு அரிவாள் வெட்டு!!

பொங்கல் விழா கபடி போட்டி - 6 பேருக்கு அரிவாள் வெட்டு!!

பொங்கல் விழா கபடி போட்டி - 6 பேருக்கு அரிவாள் வெட்டு!!
X

ராமநாதபுரம் மாவட்டம் தொண்டி அருகே பொங்கல் விழா கபடி போட்டியில் முன்விரோதம் காரணமாக 6 பேர் அரிவாளால் வெட்டப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தொண்டி அருகே புதுக்குடி கிராமத்தில் பொங்கலை முன்னிட்டு கபடி போட்டி நடைபெற்றது. அப்போது போட்டியின் போது ராஜேஷ் என்பவருக்கும் தர்மராஜ் என்பவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

அதன்பிறகு, தர்மராஜ் மற்றும் அவருடைய உறவினர்கள் பலத்த ஆயுதங்களால் ராஜேஷ் தரப்பை சேர்ந்தவர்களை தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் காளிமுத்து, சக்திவேல், சகாதேவன் உள்ளிட்ட 6 பேருக்கு அரிவாள் வெட்டு விழுந்துள்ளது.

arival 1

இதையடுத்து காயப்பட்டவர்கள் மேல் சிகிச்சைக்காக ராமநாதபுரம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இது குறித்து தொண்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

newstm.in

Next Story
Share it