பொங்கல் விழா: பெண்கள் பீடி குடிக்கும் போட்டி - குவியும் எதிர்ப்புகள்..!!
பொங்கல் விழா: பெண்கள் பீடி குடிக்கும் போட்டி - குவியும் எதிர்ப்புகள்..!!

தமிழகத்தில் பொங்கல் பண்டிகை என்றாலே கிராமப்புறங்களில் வவித்தியாசமான போட்டிகளை நடத்துவது வழக்கம். பெண்களுக்கு விளையாட்டுப் போட்டிகளாக கோலம் போடுதல், லெமன் வித் ஸ்பூன், தண்ணீர் நிரப்புதல், தண்ணீர் குடம் தூக்குதல் உள்ளிட்ட போட்டிகளை மட்டுமே இதுவரை நாம் பார்த்திருப்போம்.அந்த வகையில் தென் மாவட்ட கிராமம் ஒன்றில் வித்தியாசமான போட்டி ஒன்றை நடத்தியுள்ளனர். அது என்னவென்றால் பெண்கள் மட்டுமே கலந்துகொண்ட பீடி ஊதும் போட்டி நடத்தப்பட்டுள்ளது. இதில் பெண்கள் மட்டுமே இந்த போட்டியில் கலந்துகொண்டனர். அதில் விரைவாக பீடி இழுத்து ஊதி முடிக்கிறார்களோ அவரே வெற்றியாளர்.
அதன்படி, இந்த போட்டியில் கலந்து கொண்ட நான்கு பெண்களும் பீடியை வேகமாக இழுத்து இழுத்து விடும் வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.ஆனால் இது தற்போது பல்வேறு சர்ச்சைகளை ஏற்படுத்தியுள்ளது. இதை பார்த்து சிறுவர், சிறுமிகள் கெட்டு போக வாய்ப்புள்ளது என்று கூறும் அவரகள் இதுபோன்ற விளையாட்டுகளை அனுமதிக்கக் கூடாது என்று நெட்டிசன்கள் பலர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
விளையாட்டு போட்டி என்பது அடுத்தவர்களை ஊக்கப்படுத்தும் வகையில் இருக்க வேண்டுமே தவிர, யாரையும் கெடுப்பதாக இருக்க கூடாது என்று சமூக ஆரலர்கள் பலர் கண்டனம் தெரிவித்துள்ளனர்
பொங்கல் விழா.
— Muruganandam (@Murugan57352575) January 16, 2022
பெண்கள் பீடி குடிக்கும்
போட்டி🙄 pic.twitter.com/OsBiuMFug0

