Theme Check

பொங்கல் பரிசுத் தொகுப்பு: அரசு வழங்கும் 21 வகையான பொருட்களின் எடை எவ்வளவு?

பொங்கல் பரிசுத் தொகுப்பு: அரசு வழங்கும் 21 வகையான பொருட்களின் எடை எவ்வளவு?

பொங்கல் பரிசுத் தொகுப்பு: அரசு வழங்கும் 21 வகையான பொருட்களின் எடை எவ்வளவு?
X

அடுத்த வாரம் பொங்கல் வரவுள்ள நிலையில், மக்கள் இப்போதே அதற்கு தயாராகி வருகின்றனர். ஆனால் கொரோனா படுத்தும் பாடால் தான் கொஞ்சம் களையிழந்துள்ளது. பொங்கலையொட்டி ரேசன் கடைகளில் பொங்கல் பரிசு தொகுப்பு பொருட்கள் வழங்கப்படுகின்றன. தமிழகத்தில் உள்ள 2.15 கோடி அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசாக ரூ.1297 கோடி மதிப்பில் 21 வகையான பொருட்கள் அடங்கிய பொங்கல் பரிசுத் தொகுப்பு தமிழக அரசு சார்பில் முதல் வழங்கப்படுகிறது.

சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற விழாவில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பொங்கல் பரிசு தொகுப்பினை அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கி துவக்கி வைத்தார்.

pongel

அதனைத் தொடர்ந்து தமிழகம் முழுவதும் பொங்கல் பரிசு வழங்கும் பணி துவங்கி நடைபெற்று வருகிறது. தேனியில் உள்ள வேளாண் விளைபொருள் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கத்தில் மாவட்ட ஆட்சியர் முரளிதரன் குடும்ப அரிசி அட்டைதாரர்களுக்கு 21 வகையான பொருட்கள் அடங்கிய தொகுப்பினை

பச்சரிசி 1 கிலோ, பாசிப்பருப்பு 500 கிராம், வெல்லம் 1 கிலோ, மிளகாய்த்தூள் 100 கிராம், மல்லித்தூள் 100 கிராம், கோதுமை மாவு 1 கிலோ, ஏலக்காய் 10 கிராம், மிளகு 50 கிராம், புளி 200 கிராம், ரவை 1 கிலோ, முந்திரி 50 கிராம், நெய் 100 கிராம், கடுகு 100 கிராம்,சீரகம் 100 கிராம்,உப்பு 500 கிராம்,திராட்சை 50 கிராம், மஞ்சள் தூள் 100 கிராம்,கடலைப்பருப்பு 250 கிராம்,உளுத்தம்பருப்பு 500 கிராம் துணிப்பை ஒன்று இவற்றுடன் கரும்பும் என 21 வகையான பொருட்கள் பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்படுகிறது.

pongel

தேனி மாவட்டத்தில் உள்ள 517 ரேஷன் கடைகள் மூலம் அரிசி குடும்ப அட்டைதாரர்கள் 4 லட்சத்து 28 ஆயிரத்து 820 நபர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்படவுள்ளதாக மாவட்ட ஆட்சியர் முரளிதரன் தெரிவித்தார். இந்த நிகழ்ச்சியில் பெரியகுளம் சட்டமன்ற உறுப்பினர் சரவணகுமார், வருவாய்த் துறையினர் கூட்டுறவு துறையினர் பலர் கலந்து கொண்டனர்.

newstm.in

Next Story
Share it