பொங்கல் பரிசு தொகுப்பில் முறைகேடு.. லோக் ஆயுக்தா அலுவலகத்தில் புகார்..!
பொங்கல் பரிசு தொகுப்பில் முறைகேடு.. லோக் ஆயுக்தா அலுவலகத்தில் புகார்..!

தமிழக அரசின் பொங்கல் பரிசு தொகுப்புக்கு பொருட்கள் வாங்கியதில் முறைகேடு நடந்ததாக, லோக் ஆயுக்தா அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
திருவள்ளூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் ஜெயகோபி. இவர், சென்னை கிண்டியில் உள்ள லோக் ஆயுக்தா அலுவலகத்தில், தமிழக அரசின் பொங்கல் பரிசு தொகுப்புக்கு பொருட்கள் வாங்கியதில் முறைகேடு நடந்துள்ளதாக புகார் மனு அளித்தார்.
இதுகுறித்து அவர் கூறியதாவது: “தமிழக அரசு வழங்கிய இலவச பொங்கல் தொகுப்பில் 21 பொருட்கள் இடம் பெற்றிருந்தன. அவை தரமானதாக இல்லை. பொருட்கள் விலையும் மிக அதிகமாக உள்ளது. டெண்டர் முறையாக விடப்படவில்லை.
இந்த பொருட்களை வெளியில் வாங்கினால் 476 ரூபாய் தான் செலவாகிறது. ஆனால் அரசு, 616 ரூபாய் எனக் கூறியுள்ளது. எனவே, இது குறித்து விசாரணை நடத்தும்படி லோக் ஆயுக்தாவில் புகார் மனு அளித்துள்ளேன்” என ஜெயகோபி தெரிவித்தார்.
Next Story

