Theme Check

இன்று முதல் பொங்கல் பரிசு தொகுப்பு!!

இன்று முதல் பொங்கல் பரிசு தொகுப்பு!!

இன்று முதல் பொங்கல் பரிசு தொகுப்பு!!
X

பொங்கல் பரிசுத் தொகுப்புத் திட்டம் வழங்கும் பணிகளை முதல்வர் மு..ஸ்டாலினை இன்று தொடங்கி வைக்கிறார்.

தமிழகத்தில் 2022ஆம் ஆண்டுக்கான பொங்கல் பரிசுத் தொகுப்பு அனைத்து குடும்ப அட்டைதாரர்கள் மற்றும் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிப்பவர்களுக்கு வழங்க முதல்வர் உத்தரவிட்டார்.

இந்த நிலையில், இன்று முதல் நியாயவிலைக் கடைகளில் 21 பொருட்கள் அடங்கிய பொங்கல் சிறப்பு தொகுப்பு பொருட்கள் வழங்கப்பட உள்ளது. அதற்கு முன்னதாக சென்னை தலைமைச் செயலகத்தில் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் திட்டத்தினை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார்.

pongal

தகுதிவாய்ந்த அனைவருக்கும் சிறப்பு தொகுப்பு தரமான பொருட்களாக வழங்கப்பட வேண்டும் எனவும், திட்டத்தை ஒருங்கிணைந்து திறம்பட செயல்படுத்த அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.

21 பொருட்கள் அடங்கிய தொகுப்பு 2,15,48,060 குடும்பங்களுக்கு மொத்தம் 1,088 கோடி ரூபாய் செலவில் வழங்கப்பட உள்ளது. பொங்கல் பரிசு தொகுப்பு வழங்குவதற்கான டோக்கன் விநியோகம் நடைப்பெற்று வருகிறது.

இந்த நிலையில், பொங்கல் பரிசுத் தொகுப்பினை இடைவிடாமல் தொடர்ந்து விநியோகம் செய்திட ஏதுவாக, நியாய விலை கடைகளுக்கான விடுமுறை தினம் மாற்றியமைக்கப்பட்டுள்ளது. அதன்படி, ஜனவரி 7ஆம் தேதியன்று அனைத்து நியாய விலைக்கடைகளும் செயல்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

newstm.in

Next Story
Share it