கோவை கொடிசியாவில் பொங்கல்.. கும்மியடித்து கொண்டாடிய கொரோனா நோயாளிகள்..!
கோவை கொடிசியாவில் பொங்கல்.. கும்மியடித்து கொண்டாடிய கொரோனா நோயாளிகள்..!

கோவை கொடிசியா வளாகத்தில் அனுமதிக்கப்பட்டுள்ள கொரோனா நோயாளிகள், கும்மியடித்து, பாட்டுப்பாடி பொங்கல் பண்டிகையை கொண்டாடி மகிழ்ந்தனர்.
கொரோனா தொற்றுக்குள்ளாகிய நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க கோவை கொடிசியா வளாகத்தில் கொரோனா சிகிச்சை மையம் செயல்பட்டு வந்தது. இதனிடையே, கொரோனா பரவல் குறைந்ததால் இம்மையம் மூடப்பட்டது.
தற்போது கோவையில் கொரோனா பாதிப்பு அதிகரித்துள்ளதால், மீண்டும் கொடிசியா வளாகத்தில் 700 படுக்கைகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. இதில், பாதிப்புக்குள்ளாகும் நோயாளிகள் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.
இந்நிலையில் நேற்று, பொங்கல் வைத்து கரும்பு, பழங்களுடன் அனைவரும் பண்டிகையை கொண்டாடினர். தொடர்ந்து நோயாளிகள் கும்மியடித்து, பாட்டுப்பாடி, பொங்கல் பண்டிகையை கொண்டாடினர்.
Next Story

