தமிழ்நாட்டில் நாளை முதல் பொங்கல் தொகுப்பு விநியோகம்..!!
தமிழ்நாட்டில் நாளை முதல் பொங்கல் தொகுப்பு விநியோகம்..!!

தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகையை சிறப்பாக கொண்டாடும் வகையில் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தார். பச்சரிசி, வெல்லம், முந்திரி, திராட்சை, ஏலக்காய், நெய், கரும்பு மற்றும் கடலை பருப்பு, உளுத்தம் பருப்பு உள்ளிட்ட 20 பொருட்கள் அடங்கிய துணிப்பை வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது.
அதன்படி நாளை பொங்கல் தொகுப்பு திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கிவைக்கிறார். அதன்படி அனைத்து நியாய விலைக் கடைகளிலும் நாளை முதல் பொங்கல் தொகுப்பு வழங்கப்படவுள்ளது.அரிசி குடும்ப அட்டைதாரர்கள் மற்றும் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசித்து வரும் குடும்பங்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்படுகிறது.
Next Story

