Theme Check

திட்டமிட்டப்படி பொங்கல் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும்.. யார் யார் எங்கிருந்து செல்லவேண்டும் தெரியுமா?

திட்டமிட்டப்படி பொங்கல் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும்.. யார் யார் எங்கிருந்து செல்லவேண்டும் தெரியுமா?

திட்டமிட்டப்படி பொங்கல் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும்.. யார் யார் எங்கிருந்து செல்லவேண்டும் தெரியுமா?
X

கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையிலும் பொங்கல் பண்டிகைக்கான சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது. அதன்டி, பொங்கல் சிறப்பு பேருந்துகள் நாளை(ஜன.11) முதல் வரும் வியாழக்கிழமை(ஜன.13) வரை இயக்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.

தற்போது அரசு அறிவுறுத்தியுள்ள கொரோனா தடுப்பு வழிகாட்டு நடைமுறைகளை பின்பற்றி, பொங்கல் பண்டிகையை முன்னிட்டு. நாளை முதல் 13ஆம் தேதி வரையில், சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என போக்குவரத்துத்துறை அறிவித்துள்ளது. சென்னையிலிருந்து தினசரி இயக்கக் கூடிய 2100 பேருந்துகளுடன், 4,000 சிறப்பு பேருந்துகள் என 3 நாட்களுக்கும் சேர்த்து ஒட்டு மொத்தமாக 10,300 பேருந்துகளும். பிற ஊர்களிலிருந்து மேற்கண்ட 3 நாட்களுக்கு 5,468 சிறப்பு பேருந்துகள் என மொத்தமாக 16768 பேருந்துகள் இயக்கப்படும்.

pongel

சென்னையிலிருந்து பின்வரும் பேருந்து நிலையங்களிலிருத்து 11/01/2022 முதல் 13/01/2022 வரை பேருந்துகள் இயக்கப்படும்.
பேருந்து நிலையங்கள்:

மாதகரம் புதிய பேருந்து நிலையம் :
செங்குன்றம் வழியாக பொன்னேரி, கும்மிடிபூண்டி மற்றும் ஊத்துக்கோட்டை செல்லும் பேருந்துகள் மற்றும் ஆந்திர மாநிலம் செல்லும் பேருந்துகள்.

கே.கே. நகர் மாபோக பேருந்து நிலையம் :

ECR கழியாக புதுச்சேரி கடலூர் மற்றும் சிதம்பரம் செல்லும் பேருந்துகள்.

தாம்பரம் அறிஞர் அண் பேருத்து நிலையம் : (MEPZ)

திண்டிவனம், விக்கிரவாண்டி. பண்ருட்டி வழியாக கும்பகோணம், தஞ்சாவூர் செல்லும் பேருந்துகள்.

தாம்பரம் ரயில் நிலையப் பேருந்து நிறுத்தம்:

திண்டிவனம் மார்க்கமாக திருவண்ணாமலை செல்லும் பேருந்துகள் மற்றும் போளூர், சேத்துபட்டு, வந்தவாசி, செஞ்சி மார்க்கமாக செல்லும் பேருந்துகள் மற்றும் திண்டிவனம் ஈழியாக பண்ருட்டி, நெய்வேலி, வடலூர், சிதம்பரம். காட்டுமன்னார்கோயில் மற்றும் திண்டிவணம் வழியாக புதுச்சேரி, கடலூா் செல்லும் பேருந்துக்கள்.

பூந்தமல்லி பேருந்து நிலையம்:

வேலூர், ஆரணி, ஆற்காடு, திருப்பத்தூர், காஞ்சிபுரம், செய்யாறு. ஓசூர், தருமபுரி, கிருஷ்ணகிரி, திருத்தணி செல்லும் பேருந்துகள்.

pongel

கோயம்பேடு பேருந்து நிலையம்:

மேற்குறிப்பிட்டுள்ள ஊர்களைத்தவிர, இதர ஊர்களுக்கு செல்லும் பேருந்துகள் (மயிலாடுதுறை, நாகப்பட்டினம். வேளாங்கண்ணி திருச்சி. மதுரை, திருநெல்வேலி, செங்கோட்டை நாகர்கோவில், கன்னியாகுமரி, விழுப்புரம். கள்ளக்குறிச்சி. காரைக்குடி, புதுக்கோட்டை திண்டுக்கல், விருதுநகர். திருப்பூர், ஈரோடு, இராமநாதபுரம், தூத்துக்குடி, திருச்செந்தூர், சேலம், கோயம்புத்தூர், எர்ணாகுளம். திருவனந்தபுரம் மற்றும் பெங்களூரு)

வழித்தட மாற்றம்:

முன்பதிவு செய்துள்ள பேருந்துகள் புரட்சித்தலைவர் டாக்டர் எம்.ஜி.ஆர். பேருந்து நிலையம் கோயம்பேட்டிலிருந்து புறப்பட்டு பூந்தமல்லி, நாசரத்பேட்டை வெளிச் சுற்றுச்சாலை (Quter Ring Road) வழியாக வண்டலூர் சென்றடைந்து. ஊரப்பாக்கம் தற்காலிக பேருந்து நிறுத்தத்திற்கு சென்று, தாம்பரம் மற்றும் பெருங்களத்தூரிலிருந்து பயணம் மேற்கொள்ள முன்பதிவு செய்த பயணிகளை ஏற்றுவதற்கு வழிவகை செய்யப்பட்டுள்ளது, என போக்குவரத்துத்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

newstm.in

Next Story
Share it