கேரள ஸ்டைலில் பூனம் பாஜ்வா.. வைரலாகும் புகைப்படம்..!
கேரள ஸ்டைலில் பூனம் பாஜ்வா.. வைரலாகும் புகைப்படம்..!

‘சேவல்’ என்ற திரைப்படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானவர் பூனம் பஜ்வா. இதனை தொடர்ந்து ‘தெனாவெட்டு’, ‘கச்சேரி ஆரம்பம்’, ‘தம்பிக்கோட்டை’ போன்ற படங்களில் நடித்து ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார்.
இதையடுத்து அவருக்கு பெரிய அளவில் பட வாய்ப்புகள் இல்லாததால் தற்போது தனது அதிரடி புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிடுவதில் கவனம் செலுத்தி வருகிறார்.
அதுமட்டுமில்லாமல், உடல் எடையைக் குறைத்தால் தான் பட வாய்ப்பு கிடைக்கும் என நம்பி மொத்தமாக உடல் இளைத்து அவர் வெளியிட்டுள்ள புகைப்படம் இணையதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

அந்த வகையில் தற்போது அவருடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில், கேரளா ஸ்டைலில் வெள்ளை ஆடை அணிந்து, குடத்தை தூக்கி தோளில் வைத்தபடி பூனம் பஜ்வா நடத்திய போட்டோஷூட் புகைப்படம் ஒன்றை பதிவிட்டுள்ளார். இந்தப் படம், வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
Tags:
Next Story

