பாக்கியலட்சுமி சீரியலில் இருந்து விலகும் பிரபல நடிகை!!
பாக்கியலட்சுமி சீரியலில் இருந்து விலகும் பிரபல நடிகை!!

பாக்கியலட்சுமி சீரியலில் பாக்கியா கதாப்பாத்திரத்தில் நடித்து வரும் சுசித்ரா சீரியலில் இருந்து விலகவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
விஜய் டிவியில் நாள்தோறும் இரவு 8 மணிக்கு பாக்கியலட்சுமி சீரியல் ஒளிபரப்பாகி வருகிறது. இதில் பாக்கியா கதாப்பாத்திரத்தில் அப்பாவி மனைவியாக சுசித்ரா நடித்து வருகிறார்.
இவரது அப்பாவியான கதாபாத்திரத்திற்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். பாக்கியாவுக்கு தெரியாமல் இன்னொரு பெண்ணை காதலிக்கும் கணவர் கோபி, விவாகரத்து வரை சென்றுவிட்டார்.

இப்படி சீரியல் விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கும் நிலையில் சுசித்ரா சீரியலில் இருந்து விலக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
சுசித்ராவுக்கு பதில் வாணி ராணி , சித்தி உள்ளிட்ட சீரியல்களில் நடித்துள்ள ராதிகா நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது. பாக்கியலட்சுமி சீரியலில் இருந்து ராதிகா விலகுவதாக வெளியான தகவலால் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
சுசித்ராவுக்கு பதில் நடிக்கும் எவராக இருந்தாலும் அவர் அளவுக்கு அப்பாவியாக நடிப்பார்களா என்று ரசிகர்கள் கவலைப்பட்டுள்ளனர்.
newstm.in

