சத்தம் இல்லாமல் எளிய மக்களுக்கு பெரியளவில் உதவி வரும் பிரபல நடிகை.. 'நீங்களும் ஆதரிக்கலாமே'

சத்தம் இல்லாமல் எளிய மக்களுக்கு பெரியளவில் உதவி வரும் பிரபல நடிகை.. 'நீங்களும் ஆதரிக்கலாமே'

சத்தம் இல்லாமல் எளிய மக்களுக்கு பெரியளவில் உதவி வரும் பிரபல நடிகை.. நீங்களும் ஆதரிக்கலாமே
X

நாடு முழுவதும் கொரோனா வைரஸின் இரண்டாவது அலை பெரியளவில் பாதிப்பு ஏற்படுத்தி வருகிறது. தற்போது தொற்றின் தாக்கமும் வீரியமும் குறைந்தாலும் மக்களின் வாழ்வாதாரம் மட்டும் இன்னமும் மீளவில்லை. இதனால் மத்திய அரசு, மாநில அரசுகள் மக்களுக்கு உதவி அளித்து வருகின்றன. அதேடு பல்வேறு தொண்டு நிறுவனங்கள், பிரபலங்களும் மக்களுக்கு உதவி செய்து வருகின்றனர்.

அந்த வகையில், ஊரடங்கால் பாதிக்கப்பட்டுள்ள ஏழை மக்களுக்கு உணவளித்துவரும் நடிகை ராஷி கண்ணா தொண்டு நிறுவனத்துடன் இணைந்து மேலும் உதவ மக்களிடம் நிதி கேட்டு கோரிக்கை வைத்திருக்கிறார்.

கொரோனாவின் இரண்டாவது அலை பரவலால் நோய்த்தொற்று அதிகரித்த மாநிலங்களில் ஆந்திராவும் ஒன்று. ஊரடங்கு தற்போதுவரை அமலில் இருப்பதால் வேலைவாப்பில்லாமல் வாழ்வாதாரம் இழந்து ஏழை மக்கள் திண்டாடி வருக்கிறார்கள். அவர்களுக்கு தொடர்ச்சியாக அடங்கமறு, இமைக்காநொடிகள், ‘அயோக்யா உள்ளிட்ட படங்களின் மூலம் கவனம் ஈர்த்த நடிகை ராஷி கண்ணா தொண்டு நிறுவனத்துடன் இணைந்து தினமும் உணவளித்து வருகிறார்.

இதற்காகவே, ஒரு தனிக்குழுவை ஏற்படுத்தி உணவினை ஏழை மக்களுக்கு கொண்டு சேர்க்கிறார். மேலும் இதுதொடர்பாக தனது ட்விட்டர் பக்கத்தில் அவர் வீடியோ வெளியிட்டுள்ளளார். அதில், இன்னும், அதிக மக்களுக்கு உதவவேண்டும் என்ற நோக்கத்தில், உங்களால் ஆன நிதியை அளிக்கலாம். 100 பேருக்கு உதவமுடியவில்லை என்றாலும் ஒருவருக்காவது உதவலாமே நடிகை ராஷிகண்ணா கூறியிருக்கிறார்.


newstm.in

Tags:
Next Story
Share it