ஆபாச பட வழக்கு.. கவர்ச்சி நடிகையின் முன்ஜாமீன் மனு தள்ளுபடி !!

ஆபாச பட வழக்கு.. கவர்ச்சி நடிகையின் முன்ஜாமீன் மனு தள்ளுபடி !!

ஆபாச பட வழக்கு.. கவர்ச்சி நடிகையின் முன்ஜாமீன் மனு தள்ளுபடி !!
X

ஆபாச பட வழக்கில் நடிகை கெஹனா வசிஸ்த்தின் முன்ஜாமீன் மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

இந்தி நடிகை ஷில்பா வெட்டியின் கணவரும், தொழில் அதிபருமான ராஜ் குந்த்ரா இளம் பெண்களை வெப்சீரியலில் நடிக்க வைப்பதாக ஏமாற்றி ஆபாச படம் எடுத்து அதை செல்போன் செயலி மூலம் வெளியிட்டதாக புகார் எழுந்தது. இதனையடுத்து அவரை போலீசார் அதிரடியாக கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த சம்பவம் பாலிவுட் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.

shilpa_shetty

மேலும், ஆபாச படம் எடுப்பதற்கு ராஜ் குந்த்ராவுக்கு நடிகர், நடிகைகள் பலர் உதவியதாகவும் புகார் எழுந்துள்ளது. அந்த வகையில் அவரது கூட்டாளியான ரியான் தோர்பே உள்ளிட்டவர்கள் கைது செய்யப்பட்டனர். இது தொடர்பாக மேலும் பலர் மீது வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த நிலையில் நடிகை கெஹனா வசிஸ்த் மீதும் இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ளது. இதனையடுத்து அவர் முன்ஜாமீன் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். எனினும் நடிகையின் முன்ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து நீதிமன்றம் உத்தரவிட்டது. இது தொடர்பான உத்தரவில் நீதிபதி கூறுகையில், முதல் தகவல் அறிக்கையில் நடிகை மீதுள்ள குற்றச்சாட்டுகள் தீவிர தன்மையுடையவை.

gehana vasisth

இவர் பாதிக்கப்பட்ட பெண்களை முத்த காட்சிகள் மற்றும் பாலியல் காட்சிகளில் நடிக்க சொல்லி கட்டாயப்படுத்தி உள்ளார். இத்தகைய குற்றச்சாட்டுகளையும், சூழ்நிலைகளையும் பார்க்கும்போது இடைக்கால ஜாமீன் வழங்க இது பொருத்தமான வழக்கு அல்ல என்றார்.

இதே வழக்கில் மாடல் அழகியான ஷெர்லின் சோப்ராவின் முன்ஜாமீன் மனு சமீபத்தில் நிராகரிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

newstm.in

Tags:
Next Story
Share it