ஆபாச நடன அசைவுகள்... சன்னி லியோன் வீடியோவுக்கு சாமியார்கள், அமைச்சர் எதிர்ப்பு !!
ஆபாச நடன அசைவுகள்... சன்னி லியோன் வீடியோவுக்கு சாமியார்கள், அமைச்சர் எதிர்ப்பு !!

ஆபாச பட நடிகையான சன்னி லியோன் இப்போது பாலிவுட் திரையுலகில் கலக்கிவருகிறார். அவருக்கு பட வாய்ப்புகள் வருவதால் திறமையை வெளிப்படுத்தி வருகிறார். மேலும் சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருந்து வருகிறார்.
இந்த நிலையில், நடிகை சன்னி லியோனின் ‘மதுபன்’ பட பாடல் ஒன்றுக்கு ஆடிய குத்தாட்டம் பெரும் சர்ச்சையை கிளப்பியது. எல்லா நடிகையும் போல தான் அவரும் ஆடியுள்ளார். எனினும் பிரச்சனை என்னவென்றால், அந்த பாடலில் வரும் வரிகள் மற்றும் ஆபாச நடனம் மத உணர்வுகளை புண்படுத்தும் விதமாக இருப்பதாக எதிர்ப்பு எழுந்தது.

அதாவது, 1960-ம் ஆண்டு எஸ்.யூ சன்னி இயக்கத்தில் வெளியான திரைப்படம் கோஹினூர். இப்படத்தில் இடம்பெற்றுள்ள கிருஷ்ணர் - ராதையின் காதலை பேசும் ‘மதுபான் மெய்ன் ராதிகா நாச்சே’ பாடலுக்கு நடிகை சன்னி லியோன் நடனமாடிய வீடியோ ஒன்றை சரிகம நிறுவனம் வெளியிட்டுள்ளது. அந்த நடனம் இந்துக்களின் மனதை புண்படுத்தும் வகையில் ஆபாசமாக அமைந்துள்ளதாக பலரும் கண்டனம் தெரிவித்தனர்.

இவ்விவகாரம் தொடர்பாக மத்திய பிரதேச உள்துறை அமைச்சர் நரோட்டம் மிஷ்ரா, பகீரங்கமாக மிரிட்டல் விடுத்தார். ‘சன்னி லியோன், ஷரிப், தோஷி ஆகியோர் சர்ச்சைக்குரிய பாடலை யூடியூப்பில் இருந்து நீக்காவிட்டால், அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்’ என்று கூறினார்.

அதையடுத்து அந்த பாடலின் பாடலாசிரியர் ஷெரீப், சர்ச்சைக்குரிய பாடலின் வரிகளை மாற்றுவதாக தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில், சர்ச்சைக்குரிய பாடல் வரிகள் மாற்றப்படும் என்று அறிவித்துள்ளது. மேலும், அடுத்த மூன்று நாட்களில் அனைத்து பிளாட்ஃபார்ம்களிலும் பழைய பாடல்களுக்குப் பதிலாக புதிய பாடல் வெளியாகும் என்று பாடலை வெளியிட்ட நிறுவனம் தெரிவித்துள்ளது.
இதனால் இப்பிரச்சனை இப்போது முடிவுக்கு வந்துள்ளது.
newstm.in

