சமூக வலைதளங்களில் வெளியான ஆபாச புகைப்படங்கள்.. நடிகை அதிர்ச்சி..
சமூக வலைதளங்களில் வெளியான ஆபாச புகைப்படங்கள்.. நடிகை அதிர்ச்சி..

பிரபல நடிகையின் புகைப்படங்களை ஆபாச படங்களாக மாற்றி சமூக வலைதளங்களில் வெளியிட்ட இளைஞர்களை சைபர் கிரைம் போலீசார் கைது செய்தனர்.
மலையாள சினிமாவில் முன்னணி நடிகையான ஒருவர் தற்போது தமிழ் டிவி சீரியல்களில் நடித்து வருகிறார். இதனால் அவர் பெரும்பாலும் சென்னையிலேயே முகாமிட்டுள்ளார். இந்த நிலையில், சமீபத்தில் நடிகையின் ஆபாச புகைப்படங்கள் சமூக வலைதளமான இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியானது. இது குறித்து அறிந்த நடிகை மற்றும் அவரது ரசிகர்கள் பெரும் அதிர்ச்சி அடைந்தனர். அதோடு அந்த ஆபாச புகைப்படங்களில் இருப்பது தொடர்புடைய நடிகையில்லை என்றும் விளக்கம் அளிக்கப்பட்டது.

பின்னர், இதுகுறித்து அந்த நடிகை கேரள ஏடிஜிபி மனோஜ் அபிராமியிடம் புகார் அளித்தார். அதன்பேரில் கேரள போலீசார் தனிப்படை அமைத்து விசாரணையை தொடங்கினர். விசாரணையில், நடிகையின் மார்பிங் செய்யப்பட்ட ஆபாச புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் போலி ஐடி உருவாக்கி வெளியிட்டது தெரியவந்தது. ஆபாச படங்களை மார்பிங் முறையில் உருவாக்கி வெளியிட்டது கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்த மணிகண்டன் சங்கர் மற்றும் டெல்லி சாகர்பூர் பகுதியை சேர்ந்த பாக்கியராஜ் (22) என தெரியவந்தது.

இதையடுத்து தீவிரமாக கண்காணித்து வந்த போலீசார் மணிகண்டன், சங்கரை குமரியில் வைத்தும், பாக்கியராஜை டெல்லியில் வைத்தும் கைது செய்து சிறையில் அடைத்தனர். இதுகுறித்து நடிகை கூறியதாவது, சினிமா துறையில் உள்ள பல்வேறு நடிகைகளுக்கு எதிராக இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறுகின்றன. ஆனால் பெரும்பாலானோர் போலீசில் புகார் செய்யாததால், இதுபோன்ற குற்றவாளிகளுக்கு ஊக்கமாக அமைந்து விடுகிறது. எனவே பாதிக்கப்பட்ட நடிகைகள் இதுதொடர்பாக புகார் அளிக்க வேண்டும், என்று அவர் கூறினார்.
newstm.in

