பெண்கள் குறித்து ஆபாச பதிவு.. பிரபல நடிகர் மீது போலீசில் புகார்..!
பெண்கள் குறித்து ஆபாச பதிவு.. பிரபல நடிகர் மீது போலீசில் புகார்..!

சமூக வலைதளங்களில், பெண்கள் குறித்து ஆபாசமாக பதிவிடுவதாக நடிகர் பயில்வான் ரங்கநாதன் மீது சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
தமிழ்த் திரையுலகில் பிரபலமான காமெடி நடிகராக திகழ்ந்தவர் பயில்வான் ரங்கநாதன். இவர், பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து ஏராளமான படங்களில் நடித்துள்ளார்.
இந்நிலையில், சென்னை வேப்பேரியில் உள்ள போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் சமூக ஆர்வலர் திவ்யா என்பவர், நடிகர் பயில்வான் ரங்கநாதன் மீது புகார் ஒன்றை அளித்துள்ளார்.

அந்த புகாரில், “ட்விட்டர், யூ-டியூப் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் நடிகர் பயில்வான் ரங்கநாதன் பெண்கள் குறித்து அருவருக்கதக்க வகையில் தகாத வார்த்தைகளால் தொடர்ந்து பேசி வருகிறார்.
அரசியல் மட்டுமல்லாமல் சமூகத்தில் ஏற்பட்டு வரும் அநீதிகளுக்கு எதிராகப் பேச பெண்கள் தற்போது தான் முன் வரத் தொடங்கியுள்ளனர்.
அவர்களை, இதுபோன்ற நபர்கள் தடுக்கும் எண்ணத்துடன் சொந்த விஷயங்களைக் குறிப்பிட்டு அருவருக்கத்தக்க வகையில் பேசி வருவது ஏற்புடையது அல்ல.

அதுமட்டுமின்றி, பயில்வான் ரங்கநாதன் போன்று பலரும் பெண்களுக்கு எதிரான அவதூறு கருத்துக்களை பரப்பி, பெண்களின் கருத்து சுதந்திரத்தை ஒடுக்கத் துவங்கியுள்ளதால், இதை உடனடியாக தடுக்க வேண்டியது அவசியம். எனவே, பயில்வான் ரங்கநாதன் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று கூறியுள்ளார்.

