ஆபாச எஸ்எம்எஸ்.. ஒருவருக்கொருவர் தாக்கிக்கொண்ட பேராசிரியர்- இளைஞர் !!
ஆபாச எஸ்எம்எஸ்.. ஒருவருக்கொருவர் தாக்கிக்கொண்ட பேராசிரியர்- இளைஞர் !!

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் பறக்கை புல்லுவிளையைச் சேர்ந்தவர் வாசுதேவன் (45). இவர்,கன்னியாகுமரி அருகே உள்ள கல்லூரியில் உதவி பேராசிரியராக பணியாற்றி வருகிறார். கொரோனா காரணமாக ஆன்லைனில் பாடங்கள் எடுக்கப்பட்டன. இதனால் தற்போது அனைத்து மாணவர்களின் கைகளிலும் செல்போன் கிடைத்துள்ளது.
இந்த நிலையில், சில நாட்களுக்கு முன்பு மாணவி ஒருவரின் செல்போனுக்கு, வாசுதேவன் ஆபாச எஸ்.எம்.எஸ். அனுப்பியதாக கூறப்படுகிறது. இது குறித்து மாணவி தனது சகோதரரிடம் தெரிவித்தார். ஆத்திரம் அடைந்த அவர் கல்லூரிக்கு வந்து, பேராசிரியர் வாசுதேவனிடம் தகராறு செய்தார். அப்போது ஒருவருக்கொருவர் தாக்கிக்கொண்டனர். இந்த பிரச்சனை குறித்து கல்லூரி நிர்வாகத்திடம் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்க வில்லை. இதனால் கல்லூரியில் மாணவ, மாணவிகள் போராட்டம் நடத்தினர்.

இதையடுத்து மாணவி கொடுத்த புகாரின் பேரில் தென்தாமரைகுளம் போலீசார் பேராசிரியர் வாசுதேவன் மீது கொலை மிரட்டல், அடிதடி, பெண்மைக்கு களங்கம் விளைவித்தல் உள்பட 4 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்தனர்.
இதே போல் பேராசிரியர் வாசுதேவன், ஆன்லைன் மூலம் தென்தாமரைக்குளம் காவல் நிலையத்தில் அளித்த புகார் மனுவில், கொரோனா காலத்தில் ஆன்லைன் மூலம் வகுப்புகள் நடத்த வாட்ஸ் அப் குரூப் தொடங்கப்பட்டது. நானே குரூப் அட்மின் ஆக இருந்தேன். இந்த நிலையில் சம்பவத்தன்று அந்த மாணவி மற்றும் அவருடன் வந்த சகோதரர் எப்படி நீ எஸ்.எம்.எஸ். அனுப்புவாய் என கேட்டு தன்னை தாக்கி காலால் மிதித்து தள்ளி காயப்படுத்தியதாக கூறி இருந்தார்.

இந்த புகாரின் பேரில் மாணவி மற்றும் அவரது சகோதரர் மீது தற்போது தென்தாமரைக்குளம் போலீசார் வழக்குபதிவு செய்துள்ளனர். இதற்கிடையே பேராசிரியர் வாசுதேவனை, கல்லூரி நிர்வாகம் சஸ்பெண்ட் செய்துள்ளது.
newstm.in

