Theme Check

ஆபாச பட விவகாரம்.. கதறி அழுத நடிகை ஷில்பா ஷெட்டி !!

ஆபாச பட விவகாரம்.. கதறி அழுத நடிகை ஷில்பா ஷெட்டி !!

ஆபாச பட விவகாரம்.. கதறி அழுத நடிகை ஷில்பா ஷெட்டி !!
X

ஆபாச படங்கள் தயாரித்து செல்போன் செயலியில் பதிவேற்றம் செய்து பணம் சம்பாதித்த புகாரில் பிரபல இந்தி நடிகை ஷில்பா ஷெட்டியின் கணவர் ராஜ் குந்த்ரா கைதாகி செய்யப்பட்டார். அவரை காவலில் எடுத்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த வழக்கு பாலிவுட் திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆபாச பட வழக்கில் விசாரணை நடத்த மேலும் 3 பேருக்கு போலீசார் சம்மன் அனுப்பி உள்ளனர்.

shilpa_shetty

ராஜ்குந்த்ரா அலுவலக ஊழியர்கள் 4 பேர் அப்ரூவர் ஆகி இருப்பதாக கூறப்படுகிறது. இதனிடையே, ஆபாச படம் எடுத்ததில் ஷில்பா ஷெட்டிக்கு தொடர்பு உள்ளதா? என்று அவரிடம் போலீசார் விசாரணை நடத்தினர். ராஜ் குந்த்ராவை விசாரணைக்காக மும்பையில் உள்ள அவரது வீட்டுக்கு இரு தினங்களுக்கு முன்பு புலனாய்வாளர்கள் அழைத்துச் சென்றனர். அப்போது அங்கு அதிகாரிகளால் ஏற்கெனவே ராஜ் குந்த்ராவின் மனைவியும் நடிகையுமான ஷில்பா ஷெட்டி வரவழைக்கப்பட்டிருந்தார். அவரிடம் மும்பை குற்றப்பிரிவு போலீஸ் அதிகாரிகள் சுமார் ஆறு மணி நேரம் விசாரணை நடத்தினர்.

shilpa_shetty

விசாரணையில் அவர் தனக்கு தொடர்பு இல்லை என்று மறுத்து விட்டார். மேலும் ராஜ்குந்த்ராவிடம் கடும் வாக்குவாதத்தில் ஷில்பா ஷெட்டி ஈடுபட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. போலீஸ் விசாரணையின்போது ஆபாசப் படங்கள் தயாரிக்கப்பட்ட விவகாரத்தில் ராஜ்குந்த்ராவுக்கு தொடர்பு இல்லை என்று அழுத்தமாக நம்புவதாகக் கூறிய ஷில்பா ஷெட்டி, அது முழுக்க, முழுக்க லண்டனைச் சேர்ந்த நபரால் நிர்வகிக்கப்பட்ட செயலி என்றும் பணம் முதலீடு மட்டுமே ராஜ்குந்த்ரா தரப்பில் செய்யப்பட்டது என கூறி உள்ளார்.

அவரது வாக்குமூலத்தை பதிவு செய்த பின்னர், ஒரு மூத்த குற்றப்பிரிவு அதிகாரி, இந்த விஷயத்தில் நடிகைக்கு இதுவரை எந்த தொடர்பும் இல்லை, எனவே மேலும் விசாரணை எதுவும் இருக்காது என கூறப்படுகிறது. விசாரணையின் போது ஷில்பா ஷெட்டி உடைந்து சத்தம்போட்டு அழுததாக கூறப்படுகிறது.

shilpa_shetty

மேலும், ஷில்பா தனது கணவரிடம் உணர்ச்சிபூர்வமான இந்த விஷயம் குடும்பத்தை மோசமாக சித்தரிப்பதாகவும், பல ஒப்புந்தங்கள் பாதிக்கப்பட்டு, என்னை நம்பி விளம்பர ஒப்பந்தம் செய்தவர்கள் கூட பின்வாங்கி விட்டனர் என ஷில்பா ஷெட்டி, ராஜ் குந்தராவை கடுமையாக திட்டினார்.
இந்த ஒரு சம்பவத்தால் இத்தனை ஆண்டுகளாக தான் சம்பாதித்த பேரும் புகழும் பாதாளத்துக்கு சென்று விட்டதாகவும் அவர் கூறியதாக போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

newstm.in

Tags:
Next Story
Share it