Theme Check

கோவையில் 'பொருநை' கண்காட்சி.. முதலமைச்சர் தொடங்கி வைக்கிறார் !

கோவையில் 'பொருநை' கண்காட்சி.. முதலமைச்சர் தொடங்கி வைக்கிறார் !

கோவையில் பொருநை கண்காட்சி.. முதலமைச்சர் தொடங்கி வைக்கிறார் !
X

கோவை வஉசி மைதானத்தில் இன்று ‘பொருநை’ அகழ்வாராய்ச்சி கண்காட்சியை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார்.

கோவையில் நடக்கவுள்ள 2 நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று இரவு சென்னையில் இருந்து விமானம் மூலம் கோவைக்கு வந்தார். அவருக்கு திமுகவினர் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

இந்நிலையில் கோவை, வ.உ.சி. மைதானத்தில் அரசு மற்றும் மாவட்ட நிர்வாகம் சார்பில் அமைக்கப்பட்டுள்ள 'பொருநை' அகழ்வு ஆராய்ச்சி கண்காட்சி இன்று தொடங்கப்படவுள்ளது .கண்காட்சியை முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைக்கிறார்.தமிழக அரசின் ஓராண்டு சாதனை விளக்க ஓவிய கண்காட்சியை மு.க.ஸ்டாலின் திறந்து வைத்து பார்வையிடுகிறார். அவினாசியில் நடைபெறும் தொழில் முனைவோர்கள் ஆலோசனை கூட்டத்திலும் அவர் பங்கேற்கிறார்.

sdf

மாலையில், கார் மூலம் நீலகிரி மாவட்டம் ஊட்டி சென்று அரசு விருந்தினர் மாளிகையில் தங்குகிறார். நாளை (வெள்ளி) ஊட்டி தாவரவியல் பூங்காவில் 2 ஆண்டுகளுக்கு பிறகு நடக்கும் மலர் கண்காட்சியை துவக்கி வைக்கிறார். அன்றிரவும் ஊட்டியிலேயே தங்குகிறார். சனிக்கிழமை ஊட்டி அரசு கலைக்கல்லூரி மைதானத்தில் நடைபெறும் விழாவில் பங்கேற்று, அரசு நலத்திட்ட உதவிகள் வழங்குகிறார். பின்னர், கோவை வந்து, பீளமேடு விமான நிலையத்தில் இருந்து விமானம் மூலம் மீண்டும் சென்னை திரும்புகிறார்.

newstm.in


Next Story
Share it