Theme Check

முதுநிலை பட்டதாரி ஆசிரியா் தோ்வு தேதி அறிவிப்பு !

முதுநிலை பட்டதாரி ஆசிரியா் தோ்வு தேதி அறிவிப்பு !

முதுநிலை பட்டதாரி ஆசிரியா் தோ்வு தேதி அறிவிப்பு !
X

முதுநிலை பட்டதாரி ஆசிரியா் தோ்வு தேதியை ஆசிரியா் தோ்வு வாரியம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடா்பாக ஆசிரியா் தோ்வு வாரியம் வெளியிட்ட செய்திக்குறிப்பு: முதுநிலை பட்டதாரி ஆசிரியா்கள், உடற்கல்வி இயக்குநா் நிலை 1, கணினி பயிற்றுநா் நிலை 1 (2020-21) காலிப் பணியிடங்களுக்கு செப்டம்பர் 9,17 மற்றும் அக்டோபர் 21 ஆகிய தேதிகளில்அறிவிக்கைகள் வெளியிடப்பட்டன.

இதற்கு செப்டம்பர் 18ஆம் தேதி இணையவழியில் விண்ணப்பத்தை பதிவேற்றம் செய்யலாம் அதன் பின்னர், அதற்கு நவம்பர் 14ஆம் தேதி வரை அவகாசம் வழங்கப்பட்டது.

trb

தற்போது ஜனவரி 29ஆம் தேதி முதல் பிப்ரவரி 6ஆம் தேதி வரை உள்ள நாள்களில், இரு வேளைகளில் தோ்வுகள் நடத்த உத்தேசிக்கப்பட்டுள்ளது. இத்தேதிகள், பெருந்தொற்று சூழல், தோ்வு மையங்களின் தயாா் நிலை மற்றும் நிா்வாக வசதியைப் பொருத்து மாறுதலுக்கு உள்பட்டது என அறிவிக்கப்படுகிறது. விரிவான அட்டவணை தோ்வு தேதிக்கு 15 நாள்களுக்கு முன்பு வெளியிடப்படும், இவ்வாறு ஆசிரியா் தோ்வு வாரியம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

newstm.in

Next Story
Share it