Theme Check

நடிகர் அஜித்தை பகத் சிங் போல் சித்தரித்து போஸ்டர்!!

நடிகர் அஜித்தை பகத் சிங் போல் சித்தரித்து போஸ்டர்!!

நடிகர் அஜித்தை பகத் சிங் போல் சித்தரித்து போஸ்டர்!!
X

நடிகர் அஜித்தை பகத்சிங் போல சித்தரித்து அவரது ரசிகர்கள் மதுரையில் ஒட்டியுள்ள போஸ்டரால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக உள்ள அஜித்குமாரின் வலிமை திரைப்படம் வருகின்ற பொங்கலன்று வெளியிடப்படும் என்று படத்தின் தயாரிப்பாளர் போனி கபூர் அறிவித்தார். இந்நிலையில், வலிமை திரைப்படத்தின் மேக்கிங் வீடியோ இணையதளத்தில் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றது.

இந்நிலையில் மதுரையின் அடங்காத அஜித் குரூப்ஸ் என்ற நடிகர் அஜித்குமார் ரசிகர்கள் அஜித்தை புகழும் விதமாக வருடங்கள் கடந்தாலும் வலிமையும் வரலாறும் அழியாது என்ற வாசகங்களோடு போஸ்டர் ஒட்டி உள்ளனர்.

ajith

அதில் நடிகர் அஜீத்தின் உருவத்தை சுதந்திர போராட்ட வீரர் பகத்சிங் போல சித்தரித்துள்ளனர். சமீபத்தில் நடிகர் விஜய் சுதந்திரப் போராட்ட வீரர்கள், அரசியல் தலைவர்கள் போல தனது படத்தை சித்தரித்து வெளியிட வேண்டாம் என்று ரசிகர்களுக்கு கோரிக்கை வைத்திருந்தார்.

நடிகர் அஜித்தும் இதுபோன்ற விஷயங்களை விரும்பாத நிலையில் ரசிகர்கள் இவ்வாறு சுவரொட்டிகளை ஒட்டியிருப்பது பேசு பொருளாகியுள்ளது.

newstm.in

Next Story
Share it