முதுநிலை நீட் நுழைவுத் தேர்வு ஒத்திவைப்பு.. மத்திய சுகாதாரத் துறை அறிவிப்பு..!
முதுநிலை நீட் நுழைவுத் தேர்வு ஒத்திவைப்பு.. மத்திய சுகாதாரத் துறை அறிவிப்பு..!

இந்த ஆண்டின் மருத்துவ முதுநிலை படிப்பிற்கான நீட் நுழைவுத் தேர்வு, 6 முதல் 8 வாரங்களுக்கு ஒத்திவைக்கப்படுவதாக மத்திய சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.
எம்.டி., எம்.எஸ். உள்ளிட்ட மருத்துவ முதுநிலை படிப்புக்கான நீட் தேர்வை மத்திய சுகாதாரத் துறையின் கட்டுப்பாட்டில் இயங்கும் தேசிய மருத்துவ தேர்வுகள் வாரியம் நடத்தி வருகிறது.
இந்த ஆண்டின் முதுநிலை படிப்புக்கான நீட் தேர்வு வரும் மார்ச் மாதம் 12-ம் தேதி நடத்த திட்டமிடப்பட்டிருந்தது. இதற்கிடையே, இந்தத் தேர்வை ஒத்திவைக்கக்கோரி உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
இதேபோல, தொடர் கோரிக்கைகள் வந்ததை அடுத்து, முதுநிலை படிப்புக்கான நீட் தேர்வை ஒத்திவைக்க மத்திய சுகாதாரத் துறை முடிவு செய்துள்ளது.
அதன்படி, மார்ச் மாதம் 12-ம் தேதி நடக்க இருந்த அந்த தேர்வை, 6 முதல் 8 வாரங்களுக்கு ஒத்திவைப்பதாக மத்திய சுகாதாரத்துறை இன்று அறிவித்துள்ளது.

