தள்ளிப்போகும் சிவகார்த்திகேயனின் டாக்டர் பட ரிலீஸ்..?
தள்ளிப்போகும் சிவகார்த்திகேயனின் டாக்டர் பட ரிலீஸ்..?

நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்து முடித்துள்ள டாக்டர் படம் திட்டமிட்டபடி வெளிவருவதில் சிக்கில் உருவாகியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
கோலாமாவு கோகிலா படம் மூலம் சினிமாவில் கால்பதித்த இயக்குநர் நெல்சன், அடுத்ததாக மான்ஸ்டர் என்கிற படத்தை இயக்கினார். அதை தொடர்ந்து தற்போது சிவகார்த்திகேயன் நடித்துள்ள டாக்டர் படத்தை இயக்கி முடித்துள்ளார்.
தெலுங்கில் வெளியான ‘கேங்க்ஸ்டர்’ படத்தில் கதாநாயகியாக நடித்த ப்ரியங்கா, இந்த படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோயினாக அறிமுகமாகிறார். மேலும் யோகிபாபு, வினய் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.இந்த படத்தை கே.ஜே.ஆர் ஸ்டூடியோஸ் மற்றும் சிவகார்த்திகேயனின் எஸ்.கே புரொடக்ஷன்ஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ளன. இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். வரும் மார்ச் 26-ம் தேதி ‘டாக்டர்’ படம் திரைக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆனால் தமிழகத்தில் தற்போது தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளதால், இந்த படம் திட்டமிட்டபடி வெளிவருமா என்பதில் சந்தேகம் எழுந்துள்ளது. தமிழகத்தின் மருத்துவத் துறையை மையப்படுத்தி இந்த படம் உருவாக்கப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது.
இதனால் டாக்டர் படத்தின் முடிவுகள் தேர்தல் முடிவுகளை பாதிக்கக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் காரணமாக டாக்டர் படத்தை சட்டப்பேரவை தேர்தல் முடிந்து வெளியிட படக்குழு ஆலோசித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

