ஆரம்பமே தூள் ! செம சந்தோஷத்தில் இருக்கும் நயன்- விக்கி !!

ஆரம்பமே தூள் ! செம சந்தோஷத்தில் இருக்கும் நயன்- விக்கி !!

ஆரம்பமே தூள் ! செம சந்தோஷத்தில் இருக்கும் நயன்- விக்கி !!
X

இயக்குநர் பி.எஸ்.வினோத் ராஜ் இயக்கத்தில் நடிகை நயன்தாரா தயாரிப்பில் உருவான படம்‘கூழாங்கல்’ . குடிகார தந்தைக்கும், மகனுக்குமான உறவு பற்றிய கதையாக உருவாகியிருக்கிறது.இந்தப் படம் மிக எளிமையாக இருந்தாலும் அது எங்களுக்குள் ஏற்படுத்திய தாக்கம் ஆழமானது இதனால் இத்திரைப்படத்தை சர்வதேச திரைப்பட விழாக்களுக்கு கொண்டு செல்வோம் என நயன்தாராவும், விக்னேஷ் சிவனும் தெரிவித்து இருந்தனர்.

அந்த வகையில் நெதர்லாந்தில் உள்ள ரோட்டர்டம் சர்வதேச திரைப்பட விழாவில் போட்டி பிரிவில் திரையிட தேர்வு செய்யப்பட்டது . இதற்காக படக்குழுவினருடன் நயன்தாராவும், விக்னேஷ் சிவனும் ரோட்டர்டம் சென்று இருந்தது குறிப்பிடத்தக்கது. நெதர்லாந்தில் திரையிடப்பட்ட கூழாங்கல் டைகர் விருதை பெற்றுள்ளது. அதோடு டைகர் விருதைப் பெறும் முதல்த் தமிழ் திரைப்படம் என்ற பெருமையையும், இந்தியாவில் இது 2வது திரைப்படம் என்ற பெருமையையும் பெற்றுள்ளது.

இதற்கு முன் 2017-ல் சனல் குமார் சசிதரன் இயக்கிய செக்ஸி துர்கா என்ற மலையாள படத்துக்கு இந்த விருது கிடைத்துள்ளது.

“2021ம் ஆண்டுக்கான டைகர் விருதை கூழாங்கல் திரைப்படம் பெற்றுள்ளது. எங்கள் கடின உழைப்பு, பொறுமை மற்றும் கனவு இறுதியாக நிறைவேறியுள்ளது. உங்கள் அன்புக்கும் ஆதரவிற்கும் நன்றி” என்று உணர்ச்சி ததும்ப இயக்குனர் வினோத் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.


Tags:
Next Story
Share it