Theme Check

24 மணி நேரத்தில் மின் இணைப்பு வழங்கப்படும்!

24 மணி நேரத்தில் மின் இணைப்பு வழங்கப்படும்!

24 மணி நேரத்தில் மின் இணைப்பு வழங்கப்படும்!
X

புதிய மின் இணைப்பு கேட்டு விண்ணப்பம் செய்பவர்களுக்கு 24 மணி நேரத்தில் மின் இணைப்பு வழங்கப்படும் என்று மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி தெரிவித்துள்ளார்.

பொள்ளாச்சி அருகே உள்ள கப்ளாங்கரை பகுதியில் செயல்படுத்தப்பட்ட குடிநீர் திட்டத்தை நெகமம் அடுத்துள்ள கப்லங்கரை கிராமத்தில் மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி மற்றும் கோவை மாவட்ட ஆட்சித்தலைவர் சமீரன் நேரில் பார்வையிட்டு திட்டத்தின் பயன்பாடு குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தனர்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர், தமிழகத்தில் தடையில்லா மின்சாரம் வழங்கும் வகையில் முதல்வர் அறிவுறுத்தலின்படி மின் விநியோக கட்டமைப்பு பணிகள் நடைபெற்று வருகிறது என்று கூறினார். 216 புதிய துணை மின் நிலையங்கள் அமைப்பதற்காக இடங்கள் தேர்வு செய்யும் பணிகள் நடைபெற்று வருகிறது.

senthil balaji

புதிய மின் இணைப்புகள் கேட்டு விண்ணப்பம் செய்பவர்களுக்கு 24 மணி நேரத்தில் மின்சார இணைப்பு வழங்கப்படும் என்று தெரிவித்த அமைச்சர் விவசாயிகளுக்கு முதல்வர் அறிவித்த ஒரு லட்சம் இலவச மின்சாரம் வழங்கும் பணிகள் துரிதமாக நடைபெற்று வருவதாகவும் இதுவரை 23 ஆயிரம் விவசாயிகளுக்கு மின் இணைப்பு வழங்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டார்.

32 ஆயிரம் பேருக்கு இலவச மின்சாரம் வழங்கும் பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளது. மீதமுள்ள 45 ஆயிரம் விவசாயிகளுக்கு ஆவணங்கள் சரிபார்ப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. பணிகள் முடிந்தவுடன் மார்ச் மாதம் ஒரு லட்சம் விவசாயிகளுக்கு மின் இணைப்பு வழங்கும் திட்டம் பூர்த்தி செய்யப்படும் என்று உறுதியளித்தார்.

newstm.in

Next Story
Share it