Theme Check

மின்சார நெருக்கடி ஏற்படலாம்.. மோடிக்கு முதல்வர் கடிதம்..!

மின்சார நெருக்கடி ஏற்படலாம்.. மோடிக்கு முதல்வர் கடிதம்..!

மின்சார நெருக்கடி ஏற்படலாம்.. மோடிக்கு முதல்வர் கடிதம்..!
X

மின்சாரம் விநியோகம் செய்ய நிலக்கரி மற்றும் எரிவாயுவை ஏற்பாடு செய்து தரக் கோரி பிரதமர் மோடிக்கு டில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கடிதம் எழுதியுள்ளார். இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், “டில்லியில் மின்சார நெருக்கடி ஏற்படலாம். நான் தனிப்பட்ட முறையில் நிலைமையை உன்னிப்பாக கவனித்து வருகிறேன். அதைத் தவிர்க்க எங்களால் முடிந்தவரை முயற்சி செய்கிறோம்.

சிங்கப்பூர் வேரியன்ட்: `அப்படி ஒன்றே கிடையாது கெஜ்ரிவால்!' - கண்டித்த  சிங்கப்பூர் | Singapore foreign minister slams Arvind Kejriwal in corona  issue
இதற்கிடையில், பிரதமர் இதில் தனிப்பட்ட அளவில் தலையிடக்கோரி நான் ஒரு கடிதம் எழுதினேன். அந்தக் கடிதத்தில், ‘டில்லி ஆகஸ்ட் மாதம் முதல் நிலக்கரி பற்றாக்குறையை சந்தித்து வருகிறது. ஆகஸ்ட் மற்றும் செப்டம்பர் முதல் தொடர்ந்து மூன்றாவது மாதமாக நிலவும் நிலக்கரி பற்றாக்குறை நிலைமை குறித்து உங்கள் கவனத்தை ஈர்க்கிறேன்.

டில்லிக்கு மின்சாரம் வழங்கும் முக்கிய மத்திய உற்பத்தி ஆலைகளில் இருந்து மின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. போதுமான அளவு நிலக்கரியை மற்ற ஆலைகளில் இருந்து தாத்ரி - 2 மற்றும் ஜஜ்ஜார் டிபிஎஸ் போன்ற ஆலைகளுக்கு திருப்பி விட வேண்டும்.

டில்லி நகருக்கு மின்சாரம் விநியோகம் செய்யும் பவானா, பிரகதி - 1 மற்றும் ஜிடிபிஎஸ் ஆகிய ஆலைகளுக்கு எரிவாயுவை ஒதுக்கீடு செய்ய வேண்டும்” என அந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாக டில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.

Tags:
Next Story
Share it