Power Cut: சென்னையின் முக்கிய பகுதிகளில் இன்று (வியாழக்கிழமை) மின் தடை !
Power Cut: சென்னையின் முக்கிய பகுதிகளில் இன்று (வியாழக்கிழமை) மின் தடை !

சென்னை மாவட்டத்தின் சில பகுதிகளில் பரமரிப்புப் பணிகள் காரணமாக இன்று (ஜன.20) காலை 9 மணி முதல் மாலை 2 மணிவரை மின் தடை அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னையில் 20.01.2022 அன்று காலை 9.00 முதல் மதியம் 2.00 மணி வரை மின்வாரிய பராமரிப்பு பணி காரணமாக கீழ்கண்ட இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும். மதியம் 2.00 மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும் என்று தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் தெரிவித்துள்ளது.

பெரம்பூர்/ பேப்பர் மில்ஸ் ரோடு பகுதி: பேப்பர் மில்ஸ் ரோடு, மாதவரம் நெடுஞ்சாலை, வீனஸ், பெரம்பூர், செம்பியம், திரு.வி.க.நகர், ஸ்கூல் ரோடு, பாரதி ரோடு, மற்றும் மேற்காணும் இடங்களில் சுற்றியுள்ள பகுதிகளில் இன்று மின் தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
காலை 9 மணி என்பது அலுவலகத்துக்கு தயாராகும் நேரம் என்பதால், அதற்கு முன்பாகவே மின்சார்ந்த அத்தியாவசியப் பணிகளை முடித்துக் கொள்வது காலச் சிறந்தது ஆகும்.
newstm.in

