Theme Check

தமிழகத்தில் மின் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம்..!

தமிழகத்தில் மின் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம்..!

தமிழகத்தில் மின் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம்..!
X

தலைநகர் டெல்லி, தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களில் நிலக்கரி தட்டுப்பாட்டால் அனல் மின் நிலையங்களில் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டு, பல மாநிலங்களில் மின் தடை நிலவுகிறது.

இதனால் மக்கள் பெரும் இன்னலுக்கு ஆளாகி வருகின்றனர். இந்நிலையில், நிலக்கரி தட்டுப்பாடு காரணமாக தூத்துக்குடி அனல் மின் நிலையத்தின் 3 யூனிட்டுகளில் மின் உற்பத்தி நிறுத்தம் செய்யப்பட்டுள்ளது.

தூத்துக்குடி அனல்மின் நிலையத்தில் தலா 210 மெகாவாட் மின்சார உற்பத்தி திறன் கொண்ட 5 மின் உற்பத்தி இயந்திரங்கள் இயங்கி வருகின்றன.

தூத்துக்குடி அனல் மின் நிலையத்தின் தினசரி நிலக்கரி தேவை 9 ஆயிரம் டன். இந்நிலையில், நிலக்கரி தட்டுப்பாடு காரணமாக கடந்த சில நாட்களாக தூத்துக்குடியில் மின் உற்பத்தி கடுமையாக பாதிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில், நிலக்கரி தட்டுப்பாடு காரணமாக தூத்துக்குடி அனல் மின் நிலையத்தின் 3 அலகுகளில் இன்று மின் உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளது. 3 யூனிட்டுகளில் மொத்தம் 630 மெகாவாட் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக மின் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

மேலும், அனல் மின் நிலையத்தில் சுமார் 30 ஆயிரம் டன் நிலக்கரி மட்டுமே கையிருப்பு உள்ளதாகவும், 3 அலகுகளை தவிர்த்து மீதமுள்ள 2 அலகுகளில் சுமார் 420 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டு வருவதாகவும் அனல் மின் நிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Next Story
Share it