Theme Check

மின் தடையா..?: அப்போ இதை செய்யுங்க.. மின்துறை அமைச்சர் தகவல்..!

மின் தடையா..?: அப்போ இதை செய்யுங்க.. மின்துறை அமைச்சர் தகவல்..!

மின் தடையா..?: அப்போ இதை செய்யுங்க.. மின்துறை அமைச்சர் தகவல்..!
X

“மின் விநியோகம் குறித்து சமூக வலைத்தளங்களில் மின்சார வாரியத்தை டேக் செய்யும் போது, உங்கள் இணைப்பு எண்ணையும் சேர்த்து பதிவிடுங்கள்” என்று, அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து தமிழக மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி, “இலவச மின் இணைப்புக்காக விவசாயிகள் காத்திருந்த காலம் முடிந்துவிட்டது. இப்போது அனைத்து விவசாயிகளுக்கும் மின் இணைப்பு வழங்கப்பட்டுள்ளன.

குறிப்பாக, ஒரு லட்சம் விவசாயிகளுக்கு முதல்வர் வரும் 16-ம் தேதி ஆணை வழங்குகிறார். இந்த நிகழ்ச்சியில் காணொலி மூலம் ஒரு லட்சம் விவசாயிகள் கலந்து கொள்ள உள்ளனர்.

கோடை காலத்தில் வழக்கமாக மின் நுகர்வு அதிகரிக்கும். இதற்குத் தேவையான ஆலோசனை நடத்தி உள்ளோம். இதற்கு தேவையான நடவடிக்கை எடுக்கும் பணிகளையும் தொடங்கி உள்ளோம்.

நிலக்கரி பற்றாக்குறை காரணமாக மின் உற்பத்தி குறையக் கூடாது என்பதற்காக சுமார் 4.80 லட்சம் டன் நிலக்கரி கோரி டெண்டர் விடப்பட்டுள்ளது.

வரும் காலத்தில் உயரும் மின் தேவையை கணக்கில் கொண்டு தமிழகம் முழுவதும் 216 துணை மின் நிலையங்கள் அமைக்கும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன.

கடந்த மார்ச் 29-ம் தேதி தமிழகத்தில் இதுவரை இல்லாத அளவுக்கு 17196 மெகாவாட் மின்சாரம் பயன்படுத்தப்பட்டுள்ளது.

அதேபோல், ஆங்காங்கே ஏற்படும் மின் வினியோக பிரச்னையைச் சீர் செய்ய தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.

இது தொடர்பாக பொது மக்களுக்கு ஒரு வேண்டுகோள். மின் விநியோகம் குறித்து சமூக வலைத்தளங்களில் மின்சார வாரியத்தை டேக் செய்யும் போது, உங்கள் இணைப்பு எண்ணையும் சேர்த்துப் பதிவிடுங்கள். அப்போது தான் விரைந்து நடவடிக்கை எடுக்க முடியும்.

மாநிலத்தில் தற்போது பராமரிப்புப் பணிகள் காரணமாகவே மின் விநியோகம் நிறுத்தப்படுகிறது; மற்றபடி சீரான மின் விநியோகம் இருந்து வருகிறது. தமிழகத்தில் மின் பற்றாக்குறையால் மின் வினியோகம் நிறுத்தும் சூழல் இல்லை.

இதற்காக முதலமைச்சர் பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுத்துள்ளார். அதேபோல், மின்வாரிய செலவினங்கள் குறைக்கப்பட்டு அதன் மூலம் 2,200 கோடி ரூபாய் சேமிக்கப்பட்டுள்ளது” என்றார்.

Next Story
Share it