சென்னையில் இன்று முக்கிய இடங்களில் மின்தடை!!
சென்னையில் இன்று முக்கிய இடங்களில் மின்தடை!!

சென்னையில் இன்று பராமரிப்புப் பணி காரணமாக கீழ்க்கண்ட இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படுகிறது.
பராமரிப்புப் பணி காரணமாக இன்று காலை 09.00 மணி முதல் மதியம் 2.00 மணி வரை சென்னையின் முக்கிய பகுதிகளில் மின் விநியோகம் நிறுத்தப்படுவதாக, சென்னை மின்வாரியம் தெரிவித்துள்ளது.
புதுதாங்கல் பகுதி: முல்லைநகர் த.நா.வீ.வா, குடியிருப்பு, ஸ்டேட் பேங்க் காலனி, முடிச்சூர் ரோடு, பழைய தாம்பரம், பட்டேல் நகர், சாய் நகர், ரெட்டியார் பாளையம், பாரதிநகர், காந்திநகர், குறிஞ்சிநகர் (பகுதி) மற்றும் மேற்காணும் இடங்களில் சுற்றியுள்ள பகுதிகள்.

கே.கே நகர் / விருகம்பாக்கம் பகுதி: கே.கே நகர், அசோக் நகர், கோடம்பாக்கம், ரங்கராஜபுரம், சாய்நகர், விருகம்பாக்கம், சாலிகிராமம் மற்றும் மேற்காணும் இடங்களில் சுற்றியுள்ள பகுதிகள்.
மதியம் 2.00 மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும். காலை 9 மணி என்பது முக்கிய அலுவலக நேரம் என்பதால், பணிக்கு செல்வோர் அதற்கு முன்பாக மின்சார்ந்த அத்தியாவசியப் பணிகளை முடிப்பது நல்லது.
newstm.in

