சென்னையில் நாளை, நாளை மறுநாள் முக்கிய இடங்களில் மின்தடை.. எந்தெந்த இடங்கள் தெரியுமா?
சென்னையில் நாளை, நாளை மறுநாள் முக்கிய இடங்களில் மின்தடை.. எந்தெந்த இடங்கள் தெரியுமா?

சென்னையில் பராமரிப்பு பணிகள் காரணமாக ஒருசில குறிப்பிட்ட இடங்களில் மின்விநியோகம் நிறுத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் நாளை மற்றும் நாளை மறுநாள் ஆகிய தினங்களில் மின் தடை ஏற்பட உள்ள பகுதிகளை மின்துறை அறிவித்துள்ளது.
பராமரிப்பு பணிகள் காரணமாகவே மின் விநியோகம் நிறுத்தப்படுவதாகவும் மின்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். காலை 09.00 மணி முதல் மதியம் 02.00 மணி வரை மின்தடை ஏற்படும் என கூறப்பட்டுள்ளது.
அதன்படி, நாளை (டிச.21, திங்கள்கிழமை) கீழ்கண்ட இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அடையார் பகுதி: எம்.சி.என் நகர், இன்டஸ்டிரியல் ரோடு, பிள்ளையார் கோயில் தெரு, ஆனந்தா நகர், 200 அடி ரிங் ரோடு, சாய் ரோடு, சரவணா நகர், ஒக்கியம் துறைப்பாக்கம், ஐடி காலனி, சின்டிகேட் காலனி, சாய் பாபா நகர், மீனாட்சிபுரம், லெபர் காலனி, காமகோடி நகர்.
நாளை மறுநாள் (டிச.22, செவ்வாய்க்கிழமை) கீழ்கண்ட இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கோவூர் பகுதி: கோவூர், தண்டலம், பெரியபணிச்சேரி, தெற்கு மலையம்பாக்கம், பரணிபுத்தூர், மணஞ்சேரி, பாபு கார்டன், ஆகாஷ் நகர், மணிகண்டன் நகர், மேதா நகர், ஒன்டி காலனி, குன்றத்துhர் பகுதி.
ராஜகீழ்ப்பாக்கம் பகுதி: சாந்தா அவென்யூ, திருமகால் நகர், சிட்லப்பாக்கம் பகுதி, உமர் நகர், பாலாஜி அவென்யூ, மகாலஷ்மி நகர், கணேஷ் நகர், செம்பாக்கம் பகுதி, ஐயப்பா நகர், பவனடியார் காலனி, பிரசாந்தி காலனி, கேம்ப் ரோடு வேளச்சேரி மெயின் ரோடு, மசுதி காலனி, டேல்ஸ் அவென்யூ-1, ராஜகீழ்ப்பாக்கம், கௌரிவாக்கம்.
அன்று காலை 09.00 மணி முதல் மதியம் 02.00 மணி வரை மின்விநியோகம் நிறுத்தப்படும். மதியம் 2.00 மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.
newstm.in