தூத்துக்குடி,கன்னியாகுமரி, திண்டுக்கல், திருப்பூர் மாவட்டத்தில் இன்று மின்தடை ஏற்படும் இடங்கள்..!!
தூத்துக்குடி,கன்னியாகுமரி, திண்டுக்கல், திருப்பூர் மாவட்டத்தில் இன்று மின்தடை ஏற்படும் இடங்கள்..!!

தூத்துக்குடி மாவட்டம்:
தூத்துக்குடி மாவட்டத்தில் இன்று மின்தடை ஏற்படும் இடங்கள் அறிவிக்கப்பட்டு உள்ளன.
தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள ஸ்ரீமூலக்கரை, வாகைகுளம், குளத்தூர், மஞ்சள்நீர்க்காயல், வாகைகுளம் ஆகிய துணை மின்நிலையங்களுக்கு உட்பட்ட பகுதியில் உயர்அழுத்த மின்பாதையில் உள்ள பழுதடைந்த மின்கம்பம் மாற்றும் பணி, தொய்வான மின்பாதையை சரி செய்யும் பணிகள் செவ்வாய்க்கிழமை காலை 9 மணி முதல் மதியம் 1 மணி வரை நடக்கிறது. இதனால் ஸ்ரீமூலக்கரை துணை மின்நிலையத்தில் இருந்து செல்லும் பண்டாரவிளை பீடரில் உள்ள, சிவகளை, நயினார்புரம், மாங்கொட்டாபுரம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளிலும், வாகைகுளம் துணை மின் நிலையத்தில் இருந்து செல்லும் வல்லநாடு பீடரில் உள்ள எல்லைநாயக்கன்பட்டி, ராமநாதபுரம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளிலும், குளத்தூர் துணை மின் நிலையத்தில் இருந்து செல்லும் வேப்பலோடை பீடரில் உள்ள எஸ்.வி.புரம், கல்லூரணி, கீழவைப்பார், சிப்பிகுளம் மற்றும் அதன் சுற்று வட்டார உப்பள பகுதிகளிலும் மின்சார வினியோகம் நிறுத்தப்படுகிறது.
இதே போன்று மஞ்சள்நீர்க்காயல் துணை மின் நிலையத்தில் இருந்து செல்லும் முக்காணி பீடரில் உள்ள முக்காணி, பழையகாயல் அதன் அருகில் உள்ள பகுதிகளிலும், வாகைகுளம் துணை மின் நிலையத்தில் இருந்து செல்லும் மில் பீடரில் உள்ள நடுகூட்டுடன்காடு, கீழகூட்டுடன்காடு, அய்யனார் காலனி, அய்யப்பன் நகர், ராமநாச்சியார்புரம், கயிலாசபுரம், சண்முகபுரம், சுப்பிரமணியபுரம், சீனிநகர், கணபதி நகர், பியூலா நகர் மற்றும் அதன் அருகில் உள்ள பகுதிகளிலும் மின்சார வினியோகம் நிறுத்தப்படும்.
கன்னியாகுமரி மாவட்டம்:
கன்னியாகுமரி மாவட்டத்தில் இன்று மின்தடை ஏற்படும் இடங்கள் அறிவிக்கப்பட்டு உள்ளன.
மின் பராமரிப்பு பணிக்காக முன்சிறை துணை மின்நிலையத்திலிருந்து மின்விநியோகம் செய்யப்படும் முன்சிறை, காப்புக்காடு, மங்காடு, விரிவிளை, நித்திரவிளை, புதுக்கடை, கொல்லங்கோடு, கிராத்தூர், ஐரேனிபுரம், விழுந்தயம்பலம், பைங்குளம், தேங்காய்ப்பட்டனம், ராமன்துறை ஆகிய இடங்களுக்கும் அவற்றைச் சார்ந்த துணை கிராமங்களுக்கும் மேற்படி துணை மின்நிலையத்திலிருந்து மின்விநியோகம் இருக்காது.
இதே போன்று நடைக்காவு துணை மின் நிலையத்திலிருந்து மின்விநியோகம் செய்யப்படும் சூரியகோடு, குளப்புறம், சுந்தரவனம், வாறுதட்டு, குழிவிளை, கோழிவிளை, கோனசேரி, சாத்தன்கோடு, வாவறை, மணலி, பாலவிளை, வளனூர், சூழால், பாத்திமாநகர், மெதுகும்மல், வெங்கஞ்சி ஆகிய இடங்களுக்கும் அவற்றைச் சார்ந்த துணை கிராமங்களுக்கும் மேற்படி துணை மின் நிலையத்திலிருந்து மின் விநியோகம் இருக்காது.
திண்டுக்கல் மாவட்டம்:
திண்டுக்கல் மாவட்டத்தில் இன்று மின்தடை ஏற்படும் இடங்கள் அறிவிக்கப்பட்டு உள்ளன. ஒட்டன்சத்திரம் துணைமின்நிலையத்திற்கு உட்பட்ட தழையூத்து மின்பாதையில் பராமரிப்பு பணி நடைபெற இருப்பதால், ஒட்டன்சத்திரம், திண்டுக்கல்-பழனி சாலை, தென்றல்நகர், காந்திநகர், சோதனைச்சாவடி, உழவர்சந்தை, சம்சுதீன் காலனி, கருவூலக காலனி, அண்ணாநகர், தும்மிச்சம்பட்டிபுதூர், தழையூத்து பம்ப் ஹவுஸ் ஆகிய பகுதியில் காலை 10 மணிமுதல் பிற்பகல் 2 மணிவரை மின்வினியோகம் இருக்காது.
மினுக்கம்பட்டி
இதேபோல் பராமரிப்பு பணிகள் காரணமாக மினுக்கம்பட்டி, அய்யர்மடம், கோட்டைமேடு, குரும்பபட்டி, வி.புதுக்கோட்டை, சிக்குபள்ளம்புதூர், தேக்கம்பட்டி, தோப்புபட்டி, குன்னம்பட்டி, குட்டம், எஸ்.குட்டம், ஆசாரிபுதூர், எஸ்.சுக்காம்பட்டி, கொன்னாம்பட்டி மற்றும் அதனைச்சுற்றியுள்ள பகுதிகளில் செவ்வாய்கிழமை(7-ந்தேதி) காலை 9 முதல் பிற்பகல் 2 மணிவரை மின்வினியோகம் இருக்காது என உதவிசெயற்பொறியாளர் ஆனந்தகுமார் தெரிவித்துள்ளார்.
திருப்பூர் மாவட்டம்:
திருப்பூர் மாவட்டத்தில் இன்று மின்தடை ஏற்படும் இடங்கள் அறிவிக்கப்பட்டு உள்ளன.
ஊத்துக்குளி துணை மின் நிலையம்: ஊத்துக்குளி டவுன், ஊத்துக்குளி ஆா்.எஸ்., வி.ஜி.புதூா், ரெட்டிபாளையம், தாலிகட்டிபாளையம், தளவாய்பாளையம், பி.விஆா்.பாளையம், சிறுக்களஞ்சி, வரப்பாளையம், பாப்பம்பாளையம், வெங்கலப்பாளையம், அணைப்பாளையம், வாய்ப்பாடி, மொரட்டுப்பாளையம், கவுண்டம்பாளையம், கொடியாம்பாளையம், சேடா்பாளையம், எஸ்.பி.என்.பாளையம், வெள்ளியம்பாளையம், கத்தாங்கன்னி, கோவிந்தம்பாளையம், ஆா்.கே.பாளையம், நடுத்தோட்டம், அருகம்பாளையம்.
செங்கப்பள்ளி துணை மின் நிலையம்: செங்கப்பள்ளி, விருமாண்டம்பாளையம், காடபாளையம், பள்ளபாளையம், பழனிக்கவுண்டன்பாளையம், நீலாக்கவுண்டன்பாளையம், அம்மாபாளையம், காளிபாளையம் புதூா், வட்டாலப்பதி, செரங்காடு, ஆதியூா் பிரிவு தேசிய நெடுஞ்சாலை ஆகிய பகுதிகள் ஆகும்.
விருதுநகர் மாவட்டம்:
ராஜபாளையம் துணைமின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுகிறது. எனவே காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை பி.எஸ்.கே நகர், அழகைநகர், தெற்கு மலையடிபட்டி, சங்கரன்கோவில்முக்கு, தென்காசிரோடு, அரசு மருத்துவமனை, புதிய பேருந்து நிலையம், ஜ.என்.டி.யு.சி.நகர், பாரதிநகர்,கே.ஆர்.நகர், சமுசிகாபுரம்,சத்திரப்பட்டி, எஸ்.ராமலிங்காபுரம், கலங்காபேரி புதூர், மொட்டைமலை,வ.உ.சி நகர்,பி.ஆர்.ஆர் நகர், பொன்னகரம்,எம்.ஆர்.நகர், லட்சுமியாபுரம்,ராம்கோ நகர்,பி.டி.ஆர் நகர், நத்தம்பட்டி,வரகுணராமபுரம்,அம்மன்கோவில்பட்டி, போலீஸ்காலனி,ஸ்ரீபுரம், மீனாட்சிபுரம், ஆண்டாள்புரம், வேப்பம்ப ட்டி, சங்கரபாண்டியபுரம் மற்றும் தொட்டியபட்டி உபமின் நிலையத்தில் நடைபெறும் மாதாந்திர பராமரிப்பு காரணமாக புதுப்பட்டி,கோதைநாச்சியார்புரம்,கொத்தன்குளம்,தொட்டியபட்டி,முத்துலிங்காபுரம்,அழகாபுரி,கலங்காபேரி, கலங்காபேரி புதூர், ராஜீவ்காந்தி நகர், இ.எஸ்.ஐ காலனி, வேட்டை பெருமாள்கோவில், விஷ்ணுநகர், ஆகிய பகுதிகளில் மின்தடை ஏற்படும்.

