Theme Check

பிலிப்பைன்சில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்.. பெரும் பீதியில் மக்கள் !!

பிலிப்பைன்சில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்.. பெரும் பீதியில் மக்கள் !!

பிலிப்பைன்சில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்.. பெரும் பீதியில் மக்கள் !!
X

பிலிப்பைன்ஸ் நாட்டில் நிலநடுக்கம் ஏற்படுவது வாடிக்கை. ஆனால் சமீபக்காலமாக அவ்வப்போது நிலநடுக்கம் ஏற்பட்டு மக்களை அச்சுறுத்தி வருகிறது.

அந்தவகையில் நள்ளிரவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டு பெரும் அச்சத்தை உண்டாக்கியுள்ளது. பிலிப்பைன்ஸின் தென்கிழக்கு கடற்கரையில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 7.1 ஆக பதிவானதாக தேசிய நிலநடுக்க ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

earthquake

சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டப்போதும் சுனாமியை உருவாக்கவில்லை என்று அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த நிலநடுக்கம் சுமார் 49 மைல் தொலைவில் மையம் கொண்டது என்று அமெரிக்க புவியியல் ஆய்வு தெரிவிக்கிறது. பசிபிக் சுனாமி எச்சரிக்கை மையம், இந்த நிலநடுக்கத்தால் சுனாமி அச்சுறுத்தல் இல்லை என்று தெரிவித்துள்ளது.

எனினும் இந்த நிலநடுக்கம் உணரப்பட்டதாகவும் கட்டிடங்களில் இருந்த மக்கள் வெளியேறி சாலைகளில் தஞ்சம் அடைந்ததாகவும் தகவல்கள் வருகின்றன. ஆனால் இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட உயிர் சேதம், பொருட்சேதங்கள் குறித்த உறுதியான தகவல் எதுவும் வெளியாகவில்லை.

newstm.in

Tags:
Next Story
Share it