தலைவர் பதவிக்கு களம் இறங்குகிறார் பிரகாஷ்ராஜ்..!

தலைவர் பதவிக்கு களம் இறங்குகிறார் பிரகாஷ்ராஜ்..!

தலைவர் பதவிக்கு களம் இறங்குகிறார் பிரகாஷ்ராஜ்..!
X

தெலுங்கு திரைப்பட நடிகர்கள் சங்கமான ‘தி மூவி ஆர்டிஸ்ட் அசோஸியேஷன்’ தலைவராக இருக்கும் நரேஷின் பதவிக்காலம் இந்த வருடம் முடிவடைகிறது.
இதையடுத்து, புதிய தலைவர் உள்ளிட்ட நிர்வாகிகளை தேர்வு செய்வதற்கான தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது.

இந்தமுறை நரேஷ் போட்டியிடவில்லை. அவரும், அவருடைய ஆதரவாளர்களும் விஷ்ணு மஞ்சுவை தலைவர் பதவிக்கு நிறுத்துகின்றனர். இவர், ரஜினியின் நண்பரான மோகன் பாபுவின் மகன். விஷ்ணு மஞ்சு, இப்போதே திரையுலகின் பெரும்புள்ளிகளை சந்தித்து ஆதரவு திரட்டி வருகிறார்.

விஷ்ணு மஞ்சுவுக்குப் போட்டியாக நடிகர் பிரகாஷ்ராஜ் களமிறங்குகிறார். இந்தமுறை தலைவர் பதவிக்கு போட்டியிடுவேன் என்று அவர் ஏற்கெனவே கூறியிருந்தார். இப்போதைக்கு இவர்கள் இருவரும்தான் தலைவர் பதவிக்கான முக்கிய போட்டியாளர்களாக உள்ளனர்.

Tags:
Next Story
Share it