Theme Check

கர்ப்பிணிகளை வங்கிப் பணியில் சேர்க்க இயலாது.. SBI சர்ச்சை அறிவிப்பும்.. எதிர்ப்பும் !!

கர்ப்பிணிகளை வங்கிப் பணியில் சேர்க்க இயலாது.. SBI சர்ச்சை அறிவிப்பும்.. எதிர்ப்பும் !!

கர்ப்பிணிகளை வங்கிப் பணியில் சேர்க்க இயலாது.. SBI சர்ச்சை அறிவிப்பும்.. எதிர்ப்பும் !!
X

3 மாதத்திற்கு மேற்பட்ட கர்ப்பிணிகள் பணிக்கு சேர்க்கப்பட மாட்டார்கள் என பாரத ஸ்டேட் வங்கி அறிவித்துள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

புதிய பணியாளர் சேர்க்கை மற்றும் பதவி உயர்விற்கான மருத்துவ தகுதி வழிகாட்டு விதிகளை பாரத ஸ்டேட் வங்கி நிர்வாகம் வெளியிட்டுள்ளது. இதன் படி ஒரு பெண் 3 மாதத்திற்கு மேற்பட்ட கர்ப்பிணியாக இருந்தால் அவர் பணியில் சேர தகுதியில்லை என குறிப்பிடப்பட்டுள்ளது. இது போன்றவர்கள் குழந்தை பெற்ற பின் 4 மாதம் கழித்தே பணியில் சேர தகுதியுள்ளவர்கள் ஆவர் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

பதவி உயர்விற்கும் இதே விதி பொருந்தும் என வங்கி நிர்வாகம் தெரிவித்துள்ளது.

SBI

ஏற்கனவே இருந்த வழிகாட்டுதலில், ஆறு மாத காலம் வரை கர்ப்பமாக இருக்கும் பெண்கள், வங்கியில் வேலை செய்வது கருவின் வளர்ச்சியில் எந்த பாதிப்பை ஏற்படுத்தாது என்று தகுந்த மருத்துவரின் சான்றிதழ் சமிர்பித்தால் பணியில் அமர்ந்தலாம் என்று கூறியது. இதில் தற்போது திருத்தம் கொண்டுவரப்பட்டுள்ளது பல்வேறு தரப்பில் எதிர்ப்பை கிளப்பியுள்ளது.

இந்த திருத்தப்பட்ட வழிக்காட்டுதல் பாகுப்பாடு நிறைந்தது என்று அகில இந்திய ஜனநாயக மகளிர் சங்கம் தெரிவித்துள்ளது.

இது பெண்கள் உரிமையை பறிக்கும் செயல் என ஊழியர் சங்கங்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. இவ்விதி கடந்த 13 ஆண்டுகளுக்கு முன்பே கொண்டு வரப்பட்டு கடும் எதிர்ப்பு காரணமாக திரும்பப் பெறப்பட்டது. தற்போது மீண்டும் அவ்விதி கொண்டு வரப்பட்டுள்ளதாக தெரிவிக்கின்றனர்.


newstm.in

Next Story
Share it