Theme Check

கொரோனா தடுப்பூசியில் கர்ப்பிணிகளுக்கு முன்னுரிமை வேண்டும்! மருத்துவர்குழு கோரிக்கை!!

கொரோனா தடுப்பூசியில் கர்ப்பிணிகளுக்கு முன்னுரிமை வேண்டும்! மருத்துவர்குழு கோரிக்கை!!

கொரோனா தடுப்பூசியில் கர்ப்பிணிகளுக்கு முன்னுரிமை வேண்டும்! மருத்துவர்குழு கோரிக்கை!!
X

ஓராண்டுக்கு மேலாக கொரோனாவின் பிடியில் சிக்கி அனைத்து தரப்பு மக்களும் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகின்றனர். கொரோனா இரண்டாவது அலையில் இந்தியாவில் கர்ப்பிணிகளும் பலரும் பாதிக்கப்பட்டுள்ளனர். உயிரிழப்பும் கடந்த ஆண்டைவிட அதிகரித்துள்ளது.

இந்த நிலையில், கொரோனாவால் கர்ப்பிணிகள் இறப்பது அதிகரித்து வருவதாகவும் அவர்களுக்கு தடுப்பூசி செலுத்துவதில் முன்னுரிமை அளிக்க வேண்டும் எனவும் கூறி மருத்துவர்கள் குழு ஒன்று மத்திய அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளது.

டெல்லியை சேர்ந்த மருத்துவக்கல்லூரி மருத்துவர்கள் தயாரித்துள்ள அறிக்கையில், கொரோனாவால் கர்ப்பிணிகள் பாதிக்கப்படும் பட்சத்தில் அவர்களுக்கு ஏற்படும் உடல் நல பாதிப்புகள் அதிகம். இதனால் அவர்களுக்கு சிகிச்சை அளிப்பதும் கடினம் என அதில் கூறப்பட்டுள்ளது.

உலகில் கொரோனா அதிகம் பாதித்துள்ள 20 நாடுகளில் 9 நாடுகளில் கர்ப்பிணிகளுக்கு தடுப்பூசி போடப்படுகிறது. இதில் 2 நாடுகளில் முன்னுரிமை தரப்பட்டுள்ளது. ஆனால், இந்தியாவில் கர்ப்பிணிகளுக்கு தற்போது தடுப்பூசி செலுத்தப்படவில்லை. இந்த நிலையில் கர்ப்பிணிகளுக்கு தடுப்பூசி செலுத்தக்கோரி மருத்துவக்குழு அறிக்கை வெளியாகியுள்ளது. தடுப்பூசி செலுத்தப்பட வேண்டியவர்கள் பட்டியலில் கர்ப்பிணிகள் சேர்க்கப்படாததை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு ஒன்றும் தொடரப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

newstm.in

Tags:
Next Story
Share it