46 வயதில் இரட்டை குழந்தைகளுக்கு தாயான ப்ரீத்தி ஜிந்தா..!!
46 வயதில் இரட்டை குழந்தைகளுக்கு தாயான ப்ரீத்தி ஜிந்தா..!!

பாலிவுட் நடிகையும் பஞ்சாப் கிங்ஸ் அணியின் உரிமையாளருமான ப்ரீத்தி ஜிந்தா அமெரிக்காவில் தனது குடும்பத்தினருடன் வசித்துவருகிறார். பிரீத்தி ஜிந்தா அமெரிக்காவைச் சேர்ந்த ஜீன் குட்இனஃப் (Gene Goodenough) என்பவரைத் திருமணம் செய்து கொண்டு வாழ்ந்து வருகிறார்.தற்போது பிரீத்தி ஜிந்தாவிற்கு 46 வயதாகிறது. இந்நிலையில், அத்தம்பதிக்கு வாடகைத்தாய் மூலம் இரட்டை குழந்தைகள் பிறந்துள்ளன.
இயக்குனர் மணிரத்னம் இயக்கிய தில் சே படத்தில், ஷாருக் கானுடன் நடித்திருந்தவர் நடிகை ப்ரீத்தி சிந்தா. அந்தப் படத்தில் ப்ரீத்தி நாயர் என்னும் கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்களின் பாராட்டுகளைப் பெற்றிருந்தார். அந்தப் படம் தமிழில் ‘உயிரே’ என்ற பெயரில் வெளியிடப்பட்டது.பின்னர் கடந்த 2016-ம் ஆண்டு அமெரிக்காவை சேர்ந்த தன் நீண்ட கால நண்பரான ஜீன் குட்இனஃப் என்பவரை லாஸ் ஏஞ்சல்ஸில் திருமணம் செய்து கொண்டார்.
Hi everyone, I wanted to share our amazing news with all of you today. Gene & I are overjoyed & our hearts are filled with so much gratitude & with so much love as we welcome our twins Jai Zinta Goodenough & Gia Zinta Goodenough into our family. pic.twitter.com/wknLAJd1bL
— Preity G Zinta (@realpreityzinta) November 18, 2021
இந்நிலையில், அத்தம்பதிக்கு வாடகைத்தாய் மூலம் இரட்டை குழந்தைகள் பிறந்துள்ளன.இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் செய்தியில், "நானும், எனது கணவரும் எல்லையில்லா மகிழ்ச்சியில் இருக்கிறோம். எங்களது இதயம் மகிழ்ச்சியில் நிரம்பியிருக்கிறது. எங்களது குடும்பத்திற்கு ஜெய் ஜிந்தா குட்இனஃப் மற்றும் ஜியா ஜிந்தா குட்இனஃப் ஆகியோர் புது வரவாக வந்துள்ளனர். இந்தப் புது வரவால் எங்களது வாழ்க்கையில் புதிய மகிழ்ச்சி ஏற்பட்டுள்ளது. இதற்காக பாடுபட்ட டாக்டர்கள் மற்றும் வாடகைத்தாய்க்கு எங்களது நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறோம்" என்று தெரிவித்துள்ளார்.

