Theme Check

ப்ரீபெய்டு திட்டங்கள் இனிமே 30 நாட்கள்.. அதிரடி உத்தரவை பிறப்பித்த ட்ராய் !

ப்ரீபெய்டு திட்டங்கள் இனிமே 30 நாட்கள்.. அதிரடி உத்தரவை பிறப்பித்த ட்ராய் !

ப்ரீபெய்டு திட்டங்கள் இனிமே 30 நாட்கள்.. அதிரடி உத்தரவை பிறப்பித்த ட்ராய் !
X

தொலைத்தொடர்பு நிறுவனங்கள் அனைத்தும், தங்களின் ப்ரீ-பெய்டு திட்டங்கள் செல்லுபடியாகும் காலத்தை 30 நாட்களாக நிர்ணயிக்க இந்திய தொலைதொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் (டிராய் - Telecom Regulatory Authority of India) உத்தரவிட்டுள்ளது.

தற்போது ப்ரீ-பெய்டு செல்போன் வாடிக்கையாளர்களுக்கு ஒரு மாத திட்டமாக வழங்கப்படும் வவுச்சர்கள் 28 நாட்களாகவே இருக்கின்றன. இதனால் ஆண்டுக்கு 13 முறை ரீசார்ஜ் செய்ய வேண்டிய நிலை ஏற்படுகிறது. இந்த நிலையில் அனைத்து தொலைத்தொடர்பு நிறுவனங்களும் 30 நாள் திட்டம் ஒன்றை கட்டாயம் அமல்படுத்த வேண்டும் என டிராய் உத்தரவிட்டுள்ளது.

tower

அதன்படி, அனைத்து தொலைத்தொடர்பு நிறுவனங்களும் குறைந்தபட்சம் 30 நாட்கள் வேலிடிட்டி கொண்ட ஒரு சாதாரண ரீ-சார்ஜ் திட்டம், ஒரு சிறப்பு கட்டண திட்டம் (special tariff voucher), ஒரு காம்போ திட்டத்தையாவது வாடிக்கையாளர்களுக்கு வழங்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளது. சிறப்பு டாரிப் வவுச்சர், காம்போ வவுச்சர் ஆகியவற்றில் செல்லுபடியாகும் காலத்தை 30 நாட்கள் நிர்ணயிக்க உத்தரவிட்டுள்ளது. இதன்மூலம் ஆண்டுக்கு ப்ரீபெய்டு ரீசார்ஜ்களின் எண்ணிக்கை 12ஆக குறையும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

மாதாந்திர திட்டங்களுக்கு வருடத்திற்கு 13 முறை ரீ-சார்ஜ் செய்யவேண்டிய நிலை இருப்பது, தாங்கள் ஏமாற்றப்பட்டது போன்ற உணர்வை ஏற்படுத்துவதாக வடிக்கையாளர்களிடம் இருந்து வந்த புகார்களை, இந்த புதிய உத்தரவுக்கான காரணமாக இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் சுட்டிக்காட்டியுள்ளது குறிப்பிடத்தக்கது.

tower

விரைவில் தொலைத்தொடர்பு நிறுவனங்கள் 30 நாட்கள் வேலிடிட்டி கொண்ட மாதாந்திர ப்ரீ-பெய்டு திட்டங்களை அறிமுகப்படுத்தலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

newstm.in

Next Story
Share it