தடுப்பூசி போடாதவர்களை இழிவாக பேசிய அதிபர்!!
தடுப்பூசி போடாதவர்களை இழிவாக பேசிய அதிபர்!!

தடுப்பூசி போடாதவர்களை அல்லது போட மறுப்பவர்களை பிரான்ஸ் அதிபர் தரக்குறைவான முறையில் பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
பிரான்சில் தினமும் 2 லட்சத்துக்கும் அதிகமாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு வருகிறது. எனவே அங்கு கொரோனா தடுப்பூசியின் ஒரு டோஸ் கூட செலுத்தாதவர்களுக்கு தடுப்பூசி செலுத்துவதில் அந்நாட்டு அரசு தீவிர கவனம் செலுத்தி வருகிறது.
இந்நிலையில் பிரான்ஸ் அதிபர் தடுப்பூசி போடாதவர்களை மிகவும் தரக்குறைவாகப் பேசியுள்ளார். தடுப்பூசி செலுத்தாதவர்களை சிறையில் அடைக்கப்போவதில்லை. அவர்களைக் கட்டாயப்படுத்தி தடுப்பூசி செலுத்தப் போவதும் இல்லை.

வரும் ஜனவரி 15ஆம் தேதி முதல் தடுப்பூசி செலுத்தாதவர்கள் உணவகங்கள் செல்ல முடியாது, திரையரங்குக்குள் நுழைய முடியாது. தடுப்பூசி போடாதவர்களை இழிவு படுத்தப் போகிறேன் என்று கூறியுள்ளார்.
அவர்களை தொந்தரவு செய்ய விரும்புகிறேன். கோப்படுத்த விரும்புகிறேன். இதுதான் இனி அரசின் கொள்கை. நாங்கள் அதை இறுதி வரை செய்வோம் என தெரிவித்துள்ளார். அவர் இவ்வாறு பேசியது கடும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
எதிர்க்கட்சிகள் அதிபர் மேக்ரானை கடுமையாக எச்சரித்துள்ளன. ஒரு அதிபர் தனக்கு வாக்களித்த மக்களைப் பார்த்து இப்படியா பேசுவது என்று கண்டித்துள்ளனர்.
newstm.in

