Theme Check

அதிபர் வேட்பாளர் தேர்தல் நாளில் உயிரிழப்பு.. கொரோனாவின் கொடூரம் !!

அதிபர் வேட்பாளர் தேர்தல் நாளில் உயிரிழப்பு.. கொரோனாவின் கொடூரம் !!

அதிபர் வேட்பாளர் தேர்தல் நாளில் உயிரிழப்பு.. கொரோனாவின் கொடூரம் !!
X

மத்திய ஆப்பிரிக்க நாடான காங்கோவில் 1979ஆம் ஆண்டு முதல் சசவ் நுகுசோவை அந்நாட்டின் அதிபராக இருந்து வருகிறார். இந்நிலையில் அந்நாட்டின் புதிய அதிபரை தேர்வு செய்யும் அதிபர் தேர்தல் நேற்று முன்தினம் நடைபெற்றது. இதில் அதிபர் சசவ் நுகுசோவை எதிர்த்து கை பிரைஸ் பர்பைட் கோலஸ் என்பவர் போட்டியிட்டார்.

அதிபரை எதிர்த்து போட்டியிடுவதில் முக்கியமான நபராக கருதப்பட்ட இருக்கும் அந்நாட்டில் பெரும் ஆதரவு இருக்கிறது. இந்நிலையில், 61 வயதான இவருக்கு கடந்த 19ஆம் தேதி திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டது. அதனைத் தொடர்ந்து அவரது இறுதிக்கட்ட தேர்தல் பிரசாரம் ரத்து செய்யப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

அவருக்கு மலேரியா இருக்கலாம் என சந்தேகிப்பட்டது. ஆனால், மருத்துவ பரிசோதனையில் அவருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.

அதனைத்தொடர்ந்து மருத்துவமனையில் படுக்கையில் இருந்தபடி வீடியோ ஒன்றை வெளியிட்ட அவர் தான் மரணத்துடன் போராடிக்கொண்டிருப்பதாகவும், இருப்பினும் மக்கள் மாற்றத்துக்காக வாக்களிக்க வேண்டும் எனவும் பேசினார்.

இந்த நிலையில் தேர்தல் நாளான நேற்று முன்தினம் அவரது உடல்நிலை மிகவும் மோசமடைந்தது. இதையடுத்து உயர் சிகிச்சைக்காக அவரை பிரான்ஸ் அழைத்து செல்ல முடிவு செய்யப்பட்டது. அதன்படி காங்கோ தலைநகர் பிரஸ்சாவில்லேவில் இருந்து மருத்துவ விமானத்தில் கை பிரைஸ் பர்பைட் கோலஸ் பிரான்ஸ் புறப்பட்டார். ஆனால் செல்லும் வழியில் விமானத்திலேயே அவரது உயிர் பிரிந்தது.

முக்கியத்துவம் வாய்ந்த அதிபர் வேட்பாளரான கை பிரைஸ் பர்பைட் கோலஸ், தேர்தல் நாளன்று உயிரிழந்த சம்பவம் அவரது ஆதரவாளர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளளது. அவருக்கு பல்வேறு தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

newstm.in


Tags:
Next Story
Share it