விபத்து ஏற்பட்டது போன்று நடித்து வழிப்பறி.. பலே கும்பல் சிக்கியது!!
விபத்து ஏற்பட்டது போன்று நடித்து வழிப்பறி.. பலே கும்பல் சிக்கியது!!

சாலைகளில் விபத்தில் சிக்கி காயத்துடன் விழுந்து கிடப்பது போல் நடித்து, வழிப்பறி செய்வது, பெண்களை கடத்துவது போன்ற காட்சிகளை திரைப்படங்களில் கண்டிருப்போம். ஆனால் தற்போது அதேபாணியில் நெல்லையில் ஒரு கும்பல் வழிப்பறி செயலில் ஈடுபட்டு வந்தது தெரியவந்துள்ளது.
நெல்லை மாநகர் மற்றும் அதை சுற்றியுள்ள நெடுஞ்சாலைகளில் விபத்து ஏற்பட்டது போன்று நடித்து, இருசக்கர வாகனங்களில் வருபவர்களை அடித்து இருசக்கர வாகனங்கள் மற்றும் அவர்களிடம் இருந்து பணத்தை பறிப்பது தொடர்ந்து நடந்து வந்தது. இதுகுறித்து பாதிக்கப்பட்டவர்கள் பாளையங்கோட்டை காவல்நிலையத்தில் புகார் அளித்தையடுத்து, தனிப்படை அமைக்கப்பட்டு தாழையூத்து முதல் பொன்னாக்குடி வரை தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வந்தனர் .
அப்போது நான்கு வழிச்சாலையில் சந்கேத்திற்கிடமான வகையில் அதிவேகமாக வந்த 6 இளைஞர்களை போலீசார் மடிக்கி பிடித்து விசாரணை நடத்தினர். அவர்கள் தான் நெடுஞ்சாலையில் விபத்து ஏற்படுவதுபோன்று நடித்து இருசக்கர வாகனங்கள் பணத்தை பறித்தது தெரியவந்தது.
இதனையடுத்து நெல்லை பகுதியைச் சேர்ந்த முத்துவேல், ஹரிஹரன், மணிகண்டன், சங்கரநாராயணன், மாரிசக்தி, சண்முகசுந்தரம் ஆகிய 6 பேரையும் பாளையங்கோட்டை குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர் . அவர்களிடம் இருந்து 4 இருசக்கர வாகனங்கள் , மற்றும் 16 ஆயிரத்து 500 ரூபாய் ரொக்கப்பணத்தை பறிமுதல் செய்துள்ளனர்.
newstm.in


